Satyabrata Sahoo: தமிழகத்தில் 6.23 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டியளித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் சமீபத்தில் தொடங்கிய நிலையில், இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதனால் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று விறுவிறுப்பாக தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாளாகும்.இதனால்,அனைத்து பகுதிகளிலும் இன்று மனு தாக்கல் செய்வோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. […]
வாக்குச்சாவடி முகவர்களுக்கு மத்திய,மாநில அரசின் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் என மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள்,138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு,வருகின்ற பிப்.19-ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதன்காரணமாக,அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி, ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில்,வாக்குச்சாவடி முகவர்கள் மாநில தேர்தல் […]
சென்னை:தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியிட இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்ட நிலையில்,இது தொடர்பான வழக்கில் நாளை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1064 மாநகராட்சி உறுப்பினர்கள், 3468 நகராட்சி உறுப்பினர்கள், 8288 பேரூராட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 12,820 பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி […]
சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், திமுக,அதிமுக உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,அரசியல் கட்சிகள் அதற்கு தயாராகி வருகின்றன.இதற்கிடையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பாணையை வருகின்ற ஜன.22 ஆம் தேதி வெளியிட மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. மேலும்,கொரோனா 3-வது அலை உச்சத்தில் உள்ள […]
2 ஆம் கட்ட உள்ளாட்சி தேர்தலில் காலை 9 மணி வரை 9.72% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் முதல் கட்ட தேர்தலானது கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 74.37 சதவீத வாக்குகள் பதிவானது. இதனையடுத்து,9 மாவட்ட ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று […]
ஊரக உள்ளாட்சி தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்பப் பெற கால அவகாசம் நிறைவடைந்ததாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதனையடுத்து, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தம் 97,831 […]
நவம்பர் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு செய்யவுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்குவது போன்ற திருத்தப்பணிகளை மேற்கொள்வதற்காக நவம்பர் மாதம் 1 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளதாக தமிழ்நாடு தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளது. மேலும்,இது தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “வருகின்ற 2022 ஆம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் […]
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்காவிட்டால் வரி செலுத்த மாட்டோம், அரசுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம் என்று அந்த தொகுதி மக்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர். 1967 ம் ஆண்டு முதல் இந்த தொகுதி தனித் தொகுதியாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் மொத்தம் 5.87 கோடி வாக்காளர்கள் உள்ளனர் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.அவர்களில் ஆண் வாக்காளர்கள் –சுமார் 2.93 கோடி பெரும், பெண் வாக்காளர்கள் –சுமார் 2.99 கோடி பெரும், மூன்றாம் பாலினம் –சுமார் 5,040 பெரும் உள்ளனர் என தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.