தமிழகத்தில் ஒரே நாளில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்று சுகாதாரத்துறை தகவல். தமிழகத்தில் ஒரே நாளில் 1,594 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. நேற்று 1,489 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இன்று 1,594 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,02,237 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், இரு நாள் கொரோனா பாதிப்பு 1,594 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 776 பேருக்கு கொரோனா […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மீண்டும் கட்டுப்பாடுகள் அறிவித்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின். தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் ஒமைக்ரான் தொற்றும் வேகமாகப் பரவி வருகிறது. இரவு நேர ஊரடங்கு மற்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து தலைமைச்செயலாளர் இறையன்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மருத்துவ நிபுணர்கள் மற்றும் முக்கிய துறைகளின் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பு […]
தமிழகத்தில் மேலும் 640 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 27,37,335 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 649-ல் இருந்து 640ஆக குறைந்துள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. 1,02,775 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், ஒருநாள் கொரோனா பாதிப்பு 640ஆக உள்ளது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27,37,335 ஆக உள்ளது. சென்னையில் மேலும் 126 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே 123 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், […]
தமிழகத்தில் 15 நாட்களில் 100% கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கொரோனா தடுப்பூசி முகாமை இன்று தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் 15 நாட்களில் 100% கொரோனா தடுப்பூசி போடப்படும் என தெரிவித்தார். தமிழ்நாட்டின் இதுவரை 5.03 கோடி பேர் (64 சதவீதம்) கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். தடுப்பூசி போட்டவர்களின் எண்ணிக்கையை 70 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு […]
என் மக்களுக்கு தொண்டு செய்யாதவர்களை பழி வாங்குவேன் என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள பொன்னை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிறப்பு தடுப்பூசி முகாமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று தொடங்கி வைத்தார். சிறப்பு முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆயிரம் பேருக்கு தலா ரூ.1,500 மதிப்பிலான மளிகை பொருட்களை இலவசமாக வழங்கினார். பின்னர் கொரோனாவால் நலிவடைந்தவர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இதன்பின் இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் துரைமுருகன், பொன்னை […]