காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வு அமைக்கப்படும் என்று அறிவித்ததற்காக பிரதமர் மோடிக்கு,தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார். மகாகவி பாரதியாரின் 100-வது நினைவு நாளான இன்று,அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரின் பெருமையை பிரதமர் நரேந்திர மோடி தமிழில் ட்வீட் செய்திருந்தார்.இதனைத் தொடர்ந்து,உத்திரபிரதேச மாநிலம், வாரணாசியில் பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியாரின் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனையடுத்து,பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் […]