சென்னை : அதிமுக – பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார். அன்றிலிருந்து இப்போது வரை அதிமுக – பாஜக தொண்டர்கள் நிர்வாகிகள் மட்டுமல்லாது மற்ற கட்சியினர் என பலரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். தேர்தல் கூட்டணி , கூட்டணி மட்டுமே, கூட்டணி அரசு இல்லை என பல கருத்துக்கள் உலா வந்ததை அடுத்து, அதிமுக பொதுச்செயலார் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக தொண்டர்களுக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்கினார். […]
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற கேள்விகளும், அதற்கான பதில்களும் இரு தரப்பில் இருந்தும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன. கூட்டணி அரசுக்கு (வெற்றி பெற்றால் அமைச்சரவையில் இடம்) வாய்ப்பே இல்லை என அதிமுக தரப்பு கூறி வரும் நிலையில், அதுபற்றி தேசிய தலைமை ஆலோசித்து முடிவு எடுக்கும் என தமிழக பாஜக கூறி வருகிறது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான […]
“எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!” நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில் தேர்வு செய்யப்பட்டார். அதற்கு முன்னர் பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் அண்ணாமலை இருந்தார். அதிமுக – பாஜக கூட்டணி , பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் என கடந்த சில வாரங்களாக தமிழக அரசியலில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பாஜக, அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்காவே அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார் […]
சென்னை : தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் (அதிமுக, திமுக) கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தாலும் , தேர்தல் முடிந்த பிறகு தனிப்பெரும்பான்மையுடனே ஆட்சியமைக்க விரும்பும். கூட்டணி அரசாக அமைந்தாலும் கூட அமைச்சரவையில் பிரதான கட்சி கூட்டணி கட்சிக்கு இடம் அளித்தது இல்லை. இப்படியான சூழலில், மத்திய அமைச்சர் அமித்ஷா கடந்த ஏப்ரல் 11-ல் அதிமுக – பாஜக கூட்டணியை உறுதி செய்து விட்டு பேசிய கருத்துக்களும், நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறிய கருத்துக்களும் […]
சென்னை : தமிழக பாஜகவின் 13-வது தலைவராக நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார். சென்னை கமலாலயத்தில் நடைபெற்ற இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஹெச்.ராஜா, வி.பி.துரைசாமி, வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பாஜகவின் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் கட்சிக் கொடியேற்றி நயினார் நாகேந்திரன் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். மேலும், நிகழ்ச்சியின் போது பாஜக-வின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவும் நயினார் நாகேந்திரனை நாற்காலியில் அமரவைத்தனர். இன்று தமிழக பாஜக […]
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா சென்னை வந்திருந்த சூழலில் தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை சந்திப்போம் என தெரிவித்தார். மேலும், தேசிய அளவில் பிரதமர் மோடி தலைமையில் NDA கூட்டணி, தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கூட்டணி என தெரிவித்தார். இதனை அடுத்து, தமிழ்நாடு முதலமைச்சரும், […]
சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக தேசியக் குழு உறுப்பினர் பொறுப்பில் நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து இன்று தேசிய தலைமையுடன் முக்கிய ஆலோசனைக்காக அண்ணாமலை டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஸ்மார்ட் போன், கணினி, செல்போன் கணினி உதிரி பாக்கங்கள், செமி கண்டெக்டர் சிப்கள் உள்ளிட்ட 20 மின்னணு பொருட்களுக்கு அமெரிக்கா புதியதாக விதித்துள்ள பரஸ்பர விதி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்த […]
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை நியமனம் செய்ய பாஜக தேசிய தலைமை முடிவு செய்திருந்தது.அதன்படி, இன்று தேர்தல் விண்ணப்பங்கள் வழங்ப்பட்டன. பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எல்.முருகன் என பலரது பெயர்கள் பேசப்பட்டாலும், பாஜக தேசிய தலைமை தலைவரை ஒருமித்தமாக தேர்வு செய்ய வேண்டும் என விருப்பப்பட்டதால் நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்புமனுவை தாக்கல் […]
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், அதற்குள் பாஜக மாநிலத்தலைவர் பதவிக்கு புதிய நபரை நியமனம் செய்ய பாஜக தேசிய தலைமை முடிவு செய்திருந்தது. அதன்படி, இன்று தேர்தல் விண்ணப்பங்கள் வழங்ப்பட்டன. பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கான ரேஸில் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எல்.முருகன் என பலரது பெயர்கள் […]
சென்னை : தமிழ்நாடு பாஜகவின் 13வது மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தத் தேர்தல் செயல்முறையில் அவர் மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்ததால், தலைவர் பதவிக்கு எதிர்ப்பு வேட்பாளர்கள் இன்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவார் என்ற செய்திகள் ஏற்கனவே வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் நேற்று […]
சென்னை : அடுத்தடுத்த பரபரப்பான நிகழ்வுகளுடன் பாஜக அரசியல் களம் நகர்ந்து வருகிறது. மத்திய அமைச்சரும் , பாஜக தேசிய தலைமை மூத்த தலைவருமான அமித்ஷாவின் சென்னை வருகை, அதற்கடுத்து காலையில் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் சந்திப்பு ஆகியவை நடைபெற்றது. இந்த சந்திப்பு சுமார் 1 மணிநேரத்திக்கும் மேலாக நடைபெற்றது. அதற்கு முன்னதாக நேற்று ஆடிட்டர் குருமூர்த்தியுடன், தற்போதைய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று பாஜக மாநிலத் தலைவருக்கான தேர்தல் நடைபெற […]
சென்னை : தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் இன்னும் ஓராண்டில் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவார் என்ற செய்திகள் வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இன்று வெளியாகி இந்த விஷயமானது ட்ரென்டிங் டாப்பிக்காக மாறியுள்ளது. அதில், பாஜக கட்சியின் அமைப்பு பருவ தேர்தல் காலம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அதில், கிளை தொடங்கி மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான […]
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றப்படுவார் என்ற செய்திகள் உலா வந்தன. அதனை அண்ணாமலையும் மறைமுகமாக உறுதிப்படுத்தி வந்தார். தற்போது அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாஜக மாநிலத் தலைமை அறிவித்துள்ளது. அதில், பாஜக கட்சியின் அமைப்பு பருவ தேர்தல் காலம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அதில், கிளை தொடங்கி மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் வரையிலான தேர்தல் […]
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் உள்ள அண்ணாமலை இன்னும் ஒருசில தினங்களில் மாற்றப்படுகிறார். அவருக்கு பதிலாக புதிய பாஜக மாநிலத் தலைவர் பொறுப்பில் நியமிக்கப்பட நயினார் நாகேந்திரன், எல்.முருகன், வானதி சீனிவாசன் ஆகியோரது பெயர்கள் இருக்கின்றன என்றும், அண்ணாமலைக்கு மாநிலங்களவை எம்பி பதவி வழங்கப்படும் என்றும் பல்வேறு செய்திகள் உலா வருகின்றன. இப்படியான சூழலில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மாநிலத் தலைவர் குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். […]
சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக தற்போது அண்ணாமலை பொறுப்பில் இருக்கிறார். இவர் விரைவில் மாற்றம் செய்யப்படுகிறார் என்றும், விரைவில் தமிழ்நாடு பாஜகவுக்கு புதிய தலைவரை பாஜக தேசியத் தலைமை அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. அதற்கேற்றாற்போல அடுத்தடுத்தடுத்த நகர்வுகள் இருக்கிறது. 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகும் பட்சத்தில், ஏற்கனவே அதிமுக தலைவர்களுடன் உரசலில் ஈடுப்பட்டுள்ள அண்ணாமலையை மாற்றக்கோரி அதிமுக மூத்த நிர்வாகிகள் பாஜக தேசிய தலைமைக்கு கோரிக்கை வைத்ததாக செய்திகள் […]
சென்னை : தேசிய கல்வி கொள்கை பற்றிய பேச்சுக்கள் தற்போது தமிழக அரசியலில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தேசிய கல்விக்கொள்கையில் தாய்மொழி மற்றும் ஆங்கிலம் தவிர்த்து 3வது மொழி படிக்க வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. அந்த 3வது மொழி ஹிந்தி மொழியாக இருக்க மத்திய அரசு, தொடர்ந்து இந்தி மொழியை மறைமுகமாக திணிக்கிறது என தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன. தேசிய கல்வி கொள்கை விஷயத்தில் தமிழக […]
சென்னை : மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற பிறகு நரேந்திர மோடி முதல் முறையாக ஜூன் 20 ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக ஒரு தகவல் வெளியானது. தற்பொழுது, பிரதமர் 20-ம் தேதி தமிழ்நாடு வருகை தர இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆம், 20-ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியின் வருகை தொடர்பான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என பாஜக மாநில துணைத்தலைவர் கரு.நாகராஜன் அறிவித்துள்ளார். அதாவது, சென்னை – நாகர்கோவில் மற்றும் மதுரை – […]
Annamalai : நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் கட்சி தலைமை உத்தரவிட்டால் போட்டியிடுவேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்தார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு மோடி மீண்டும் பிரதமராக கொண்டுவர வேண்டும் என்ற நோக்கத்திலும், தமிழக பாஜகவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல வேண்டும் என்ற எண்ணத்திலும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரை 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் சென்று சமீபத்தில் திருப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி […]
பாஜகவில் மாற்று கட்சியினர் இணையும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்கொண்டு வரும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நடைபயணம் நாளையுடன் நிறைவு பெறும் நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே நடைபெறும் என் மண் என் மக்கள் வெற்றி விழா நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். இந்நிலையில், மதுரையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இம்மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான பணியில் ஒருபக்கம் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வரும் நிலையில், மறுபக்கம் பிரதான கட்சிகள் அனைத்தும் கூட்டணி, தொகுதி பங்கீடு, பிரச்சாரம், வாக்குறுதி மற்றும் வேட்பாளர்கள் தேர்வு என தேர்தலுக்கான பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில், பல்வேறு கட்சிகளும் தங்கள் கட்சி தேர்தல் பொறுப்பாளர்களை மாநில, மாவட்ட வாரியாக அறிவித்து வருகின்றனர். […]