5 நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி இன்று கட்சி எம்.பிக்களை சந்தித்து பேசவுள்ளார். மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் கட்சியின் தலைவருமாகிய மம்தா பானர்ஜி அவர்கள் ஐந்து நாள் சுற்றுப்பயணமாக டெல்லி சென்றுள்ளார். நேற்று டெல்லியில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆனந்த் சர்மா மற்றும் கமல்நாத் ஆகியோரை சந்தித்துப் பேசியிருந்தார். மேலும் நேற்று மாலை 4 மணியளவில் பிரதமர் மோடி அவர்களையும் சந்தித்து பேசியிருந்தார். இதனையடுத்து டெல்லியில் உள்ள […]
மேற்கு வங்கத்தில், ராஜ் பவனில் ஆளுநர் ஜகதீப் தங்கர், ஒரே நேரத்தில் 43 அமைச்சர்களுக்கும் பதவியேற்பு பிரமாணத்தை செய்து வைத்துள்ளார். மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்றது. இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 215 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாரதிய ஜனதா 77 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக இடம்பிடித்துள்ளது. இந்த நிலையில், மம்தா பானர்ஜி அவர்கள் மே 5-ஆம் தேதி, மூன்றாவது முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். இவர் பெங்காலி […]
நந்திகிராமில் வாக்குகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற திரிணாமுல் கட்சியினரின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட ஆரம்பத்தில் பின்னடைவில் இருந்தார். இதன்பின் 1,417 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வந்த நிலையில் சுவேந்து அதிகாரியைவிட 1,200 வாக்குகள் கூடுதலாக பெற்று மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், மேற்குவங்கம் நந்திகிராம் தொகுதியில் மம்தாவுக்கு எதிராக போட்டியிட்ட பாஜக வேட்பாளர் […]
மம்தா பானர்ஜி தனது வாக்கு வங்கிக்காக இறந்த உடல்களை வைத்து கூச் பகுதியில் பேரணி நடத்துகிறார்,என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகளில் 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.இதில்,நான்காம் கட்ட வாக்குப் பதிவானது ஏப்ரல் 10 ம் தேதி நடைபெற்ற போது,கூச் பெஹார் மாவட்டத்தின் சீதகுல்ச்சியில் ஒரு வாக்குச் சாவடியில் வன்முறை வெடித்தது.இதனையடுத்து பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேற்கு வங்க முதல்வர் மம்தா […]
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி அவர்களின் முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாளை நடைபெறும் நிகழ்வுகளில் பங்கேற்க மேற்கு வங்காள முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பேனர்ஜி நேற்று இரவு சென்னை வந்தார். சென்னை வந்த அவர் அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்தார். சந்திப்பின் போது வள்ளுவரின் சிலையையும் மற்றும் ஒரு பரிசு பொருளையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
மேற்கு வங்களா மாநிலமும் திராவிடர்கள் இருந்த மண் தான் என்று மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுகந்த் சேகர் ராய் மாநிலங்களவையில் கடந்த 27ம் தேதி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் பெயரில் இருக்கும் “வங்களாம்” என்ற வார்த்தியை நீக்கி “பங்களா” வார்த்தையை சேர்த்து கோரி மாநிலங்களைவையில் குரல் எழுப்பினர் சுகந்த் சேகர் ராய் . பங்களா என்ற வார்த்தைக்கு விளக்கம் கூறியுள்ள அவர் திராவிடம் என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளார். மேற்கு வங்கத்தில் […]
முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் , தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில துணை தலைவருமான குமாரதாஸ் அவர்கள் சற்று முன் மாரடைப்பால் காலமானார். கன்னியாகுமாரி மாவட்டம் கிள்ளியூர் தொகுதியில் இருந்து 1984,1991,1996 மற்றும் 2001 என்று தொடர்ந்து நான்கு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர குமாரதாஸ். ஆரம்ப கால அரசியலில் ஜனதா தளம் கட்சியில் இருந்து இவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பிளவு, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தமிழ் மாநில […]
பெண்களுக்கு 41% இடம் வழங்கப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம் பஞ்சாப் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் அந்தந்த மாநில கட்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் கூறினார். மேற்கு வங்க மாநிலத்தில் ஆட்சி செய்துவரும் மம்தா பானர்ஜி இன்று நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார். இதில் பெண்களுக்கு 41% இடம் வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் 41 சதவீதம் பேர் பெண்கள். பாராளுமன்ற தேர்தலில் ஜார்கண்ட் – 5, அசாம் – 6, பீகார் – 2, […]