கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்தில் 2 கிராமங்கள் தனித்தீவாக காட்சியளிக்கின்றன. மாண்ட்ஸ் புயல் காரணமாக பெய்த கனமழையால் வடதமிழகத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி விட்டன. இதனால், பல்வேறு சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நீர்நிலைகளில் உபரிநீரை திறக்கபட்டு வருகின்றன. பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் வீதம் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூரை அடுத்து உள்ள சுப்பாரெட்டி பாளையம், பள்ளிபுரம் கிராமத்து மக்கள் மீஞ்சூருக்கு […]
காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்து வருவதால், திருவள்ளூரில் ஒரு சில இடத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வலுவிழந்து வரும் நிலையில் நாளை முதல் 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுசேரியில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதே போல் கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக, திருவள்ளூரில் ஒரு சில […]
திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை நடக்கும் மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்தினால் ஆண்ட்ராய்டு போன் இலவசம். திருவள்ளூர் நகராட்சியில் நாளை நடைபெறும் மாபெரும் தடுப்பூசி முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் ரூ.10000 மதிப்பிலான ஆண்ட்ராய்டு மொபைல் மூன்று பேருக்கு வழங்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அறிவித்துள்ளார் என்று தகவல் கூறப்படுகிறது. இதனிடையே, மக்களிடையே கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் தொடர்பான சிறந்த 10 மீம்ஸ்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை ஒவ்வொன்றிற்கும் ரூ.1,000 வரை பரிசுத் […]