சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் பல்வேறு கட்சி பிரமுகர்கள் , வழக்கறிஞர்கள் , ரவுடிகள் என 30 பேர் மீது காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. ரவுடி திருவெங்கடம் என்பவர் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கு பிறகு ஆனந்த் என்பவர் பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி […]