திருவள்ளூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27-ம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. ஒரு பக்கம், மாநாடுக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முதல் மாநாடு வெற்றி பெற கொடியை வைத்து பூஜை செய்வதற்காக திருத்தணி முருகன் மலைக் கோயிலில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் 100 அடி நீளம் கொண்ட கட்சிக் கொடி ஏந்தி மாடவீதியில் விதிகள் மீறி ஊர்வலம் நடத்தினர். இதனை […]
திருவள்ளூர் : சென்னையைப் போலவே திருவள்ளூர் மாவட்டத்திலும் பல இடங்களில் கனமழை பெய்து மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. அங்கு தற்போது தேங்கி இருக்கும் மழை நீர்களை அகற்றும் பணிகளும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொடுக்கும் பணிகளும் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், மழை நீர் தேங்கி இருப்பதால் நேரடியாகச் சென்று வேகமாக உணவுகளை வழங்குவது சிரமம் என்பதால் ட்ரோன் மூலம் நிவாரண பொருட்களை வழங்கும் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே, […]
திருவள்ளூர் : பொன்னேரி அடுத்த மாதவரம் பகுதியில், சர்வதேச நடன தினத்தை முன்னிட்டு, நடிகர் பிரபுதேவா முன்னிலையில் ‘நம்ம மாஸ்டர் நம்ம முன்னாடி’ என்ற உலக சாதனை நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், 1800 நடன கலைஞர்கள் பங்கேற்று பிரபுதேவாவின் 100 பாடல்களுக்கு 100 நிமிடங்கள் நடனமாடி உலக சாதனை படைத்தனர். இந்த சாதனை நிகழ்வை பிரபுதேவா, நாற்காலியில் அமராமல் மேடையில் நின்றபடியே மெய்சிலிர்த்து ரசித்தார். இதற்கு முன்னதாக, கடந்த மே 2ம் தேதி சென்னையில் நடைபெறவிருந்த […]
திருவள்ளூர் : தமிழ்நாடு மாநிலம் திருவள்ளூர் மாவட்டம் காக்களூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர், ஒரு பெண் பலத்த காயமடைந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியாளர்கள் இணைந்து பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ எறிந்து […]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இதனால், பார்க்கும் இடமெல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ள நிலையில், இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழல் மிக்ஜாம் புயல் தீவிர புயலாக வலுப்பெற்று உள்ளதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும் இன்று இரவுக்கு பிறகு படிப்படியாக மழை குறையும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தீவிர […]
கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், திருவள்ளூர் மாவட்டத்தில் 2 கிராமங்கள் தனித்தீவாக காட்சியளிக்கின்றன. மாண்ட்ஸ் புயல் காரணமாக பெய்த கனமழையால் வடதமிழகத்தில் பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி விட்டன. இதனால், பல்வேறு சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நீர்நிலைகளில் உபரிநீரை திறக்கபட்டு வருகின்றன. பூண்டி ஏரியில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் வீதம் உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், கொற்றலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், திருவள்ளூர் மாவட்டத்தில் மீஞ்சூரை அடுத்து உள்ள சுப்பாரெட்டி பாளையம், பள்ளிபுரம் கிராமத்து மக்கள் மீஞ்சூருக்கு […]
இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குவதை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை. சென்னையை அடுத்து மாமல்லபுரத்தில் இன்று 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்குகிறது. இன்று தொடங்கும் உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான ஏற்பாடுகள் குறித்து மாமல்லபுரத்தில், இன்று காலை 11 மணிக்கு அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்கின்றனர். செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு […]
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவை முன்னிட்டு 4 மாவட்டங்களுக்கு ஜூலை 28 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வரும் 28-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மாமல்லபுரத்தில் ஒருபுறம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், தொடக்க விழா […]
சென்னை மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த ரெட் அலெர்ட் விலக்கிக்கொள்ளப்பட்டு ஆரஞ்சு அலெர்ட்டாக மாறுகிறது என்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது சென்னையிலிருந்து தென்-தென்கிழக்கே சுமார் 150 கி.மீ தொலைவிலிருந்து 18 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும். இது வடக்கு தமிழகம் & அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரைகளை புதுச்சேரிக்கும் சென்னைக்கும் இடையே நவம்பர் 19 […]
திருவள்ளூர் ,செங்கல்பட்டு,மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து இருக்கும் நிலையில்,கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் வீடுகள்,சாலைகள்,கடைகளுக்குள் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து உள்ளன.இதனால்,பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட திருவள்ளூர் ,செங்கல்பட்டு,மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை மேலாண்மை மையத்திலிருந்து மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். அதன்படி, செங்கல்பட்டு,திருவள்ளூர் மாவட்டத்திற்கு தலா 1 […]
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள அங்காளம்மன் குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியின் அங்காளம்மன் குளத்தில் சுமதி (38) ஜீவிதா (14) அஸ்திதா (14) சுகந்தி (38) ஜோதி (10) ஆகிய 5 பெரும் துணிதுவைக்க குளத்திற்கு சென்றுள்ளனர். அப்போது துணி துவைக்கும் போது தண்ணீரில் ஒருவர் முழ்கியுள்ளார். மூழ்கியவரை காப்பாற்ற சென்ற போது ஒன்றன்பின் ஒன்றாக நீரில் மூழ்கி 5 பேரும் உயிரிழந்துள்ளனர்.
ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடம் ஒளிபரப்பில் காவி உடையில் திருவள்ளுவர் உருவம் காட்டப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் பாடங்களை கல்வித் தொலைக்காட்சியின் வாயிலாக ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சி அண்மையில் தொடங்கி வைக்கப்பட்டது.குறிப்பாக ஊரடங்கு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கல்வித் தொலைக்காட்சியில் ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாட ஒளிபரப்பில் காவி உடையில் திருவள்ளுவர் உருவம் காவி உடையில் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது.இது […]
புதுமணத்தம்பதிகளுக்கு வெங்காயத்தை பரிசளித்த தோழிகள். பருவமழை காரணமாக, வெங்காயத்தின் வரத்து குறைந்த நிலையில், வெங்காயவிலை வானை முட்டும் அளவுக்கு கிடுகிடு என உயர தொடங்கியது. இதனால், இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், பொன்னேரியில் நடைபெற்ற திருமண விழாவில், மணமக்களுக்கு வெங்காயம் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ வெங்காயத்தை பூ செண்டு போல் அலங்கரித்து, மணப்பெண்ணின் தோழிகள் மணமக்களுக்கு பரிசாக அளித்துள்ளனர்.
இன்று காலை 7 மணி முதல் முதற்கட்ட வாக்குபதிவு நடைபெற்று வருகிறது. கடம்பத்தூர் அருகே உள்ள பாப்பரம்பாக்கம் வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வாக்குப்பெட்டியை வெளியே எடுத்து வந்து மர்ம நபர்கள் தீ வைத்தனர். தமிழகத்தில் புதியதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் சென்னை தவிர 27 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.அதன்படி முதற்கட்டமாக இன்று காலை 7மணி முதல் வாக்குபதிவு தொடங்கியது. இன்று […]
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஓர் தனியார் மர குடோனில் 3 குடோனில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது, இந்த தீயை அணைக்க 7 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்குன்றம் நகருக்கு அருகே தண்டல்கழனியில் உள்ள மரகுடோனில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இங்கு மொத்தம் 8 குடோன்கள் உள்ளன. அதில் தற்போது வரை 3 குடோனில் உள்ள அட்டைப்பெட்டிகள் மற்றும் மரச்சாமான்களில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தை கட்டுக்குள் கொண்டு வர […]
தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது.மேலும் சென்னை , காஞ்சிபுரம் ,விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது .மேலும் தூத்துக்குடி , நெல்லை, வேலூர் ,திருவண்ணாமலை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என்று தெரிவித்தது வானிலை ஆய்வு மையம். இதன் விளைவாக பல இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வந்த வண்ணம் உள்ளது.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. […]
திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் பல்வேறு இடங்களில் மழை பரவலாக பெய்தது.குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக மழை அநேக இடங்களில் கனமழை பெய்து வருகிறது.மேலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம் ,தூத்துக்குடி ,நெல்லை வேலூர், திருவள்ளூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்டத்தில் […]
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள ஒரு ஸ்டேட் பாங்க் வங்கியில் நேற்று வழக்கம்போல செயல்பட்டுக்கொண்டிருந்தது.பிற்பகல் 12 மணி அளவில் வாடிக்கையாளர் கூட்டம் அதிகளவில் இருந்தது. அப்போது வங்கி வாசலில் இருந்த நீர் தொட்டியில் இருந்து சுமார் 3 அடி நீளம் கொண்ட நல்ல பாம்பு ஓன்று வங்கி உள்ளே நுழைந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் அலறி அடித்து வெளியே ஓடி வந்தனர்.வங்கி அதிகாரிகளும் பீதியடைந்தனர். இதைத்தொடர்ந்து தீயணைப்பு வீரர்களுக்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் […]
கொசஸ்தலை ஆற்றில் மக்கள் இறங்க வேண்டாம் என்று திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.அந்த வகையில் நேற்று வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.குறிப்பாக சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்தது. இதன் விளைவாக திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கொசஸ்தலை ஆற்றில் மக்கள் இறங்க வேண்டாம் .மக்கள் […]
ஹார்டுவேர்டு பல்கலைகழகத்தில் தமிழ் மொழிக்கான நிரந்தர இருக்கை அமைப்பதற்கான திருவள்ளூரில் உள்ள ஸ்ரீ நிகேதன் பள்ளி மாணவர்கள் சுமார் 600 பேர்,தங்களால் இயன்ற ரூ.20 முதல் ரூ.5500 வரை செலுத்தி சேமித்த ரூ.7,50,000வை தங்களது பங்களிப்பாக தமிழக தமிழ் மொழி மற்றும் கலாச்சார அமைச்சர் மா.பா பாண்டியராஜன் அவர்களிடம் கொடுத்தார்கள். இந்த பணத்தை நான் பெருமிதம் அடைகிறேன் என அமைச்சர் கூறியுள்ளார்.