திருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாற்றில் முதல் முறையாக ரூ.140.34 கோடி உண்டியல் காணிக்கை என தகவல். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் முதல் முறையாக ஆகஸ்ட் மாதத்தில் ரூ.140.34 கோடி உண்டியலில் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆகஸ்ட் மாதத்தில் 22.22 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து காணிக்கையாக ரூ.140.34 கோடி செலுத்தியுள்ளனர். திருப்பதி கோயிலில் 1.5 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன, 10.85 லட்சம் தலைமுடி காணிக்கை, 47.74 லட்சம் பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டுள்ளது […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்ய அனுமதி வழங்க கோரி திருப்பதி தேவஸ்தான நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து இன்று முதல் கோவிலில் பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி, நேற்று முதல் அலிபிரியில் உள்ள பூதேவி காம்பிளக்ஸில் நாளொன்றுக்கு 3000 டோக்கன்கள் என்ற வீதம் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த டோக்கன்களை பெற்று கொண்டவர்கள் இன்று இலவச தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும், இன்று வழங்கப்படும் டோக்கன்களை பெற்று […]