திருப்பதி சர்வதேச விமான நிலைய ஓடுபாதையில் கவிழ்ந்த தீயணைப்பு வாகனம். திருப்பதி சர்வதேச விமான நிலையத்தில் உள்ள ஓடுபாதையில் இன்று தீயணைப்பு வாகனம் ஓன்று கவிழ்ந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த விமான நிலைய இயக்குனர் எஸ்.சுரேஷ் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். பின்னர், 2 அரை மணி நேரத்தில் ஓடுபாதையில் இருந்துதீயணைப்பு வாகனம் அகற்றப்பட்டது. இந்த விபத்து நேரத்தில் ஹைதராபாத்தில் இருந்து ஒரு விமானம் தரையிறங்கவிருந்தது, பின்னர் அந்த விமானம் பெங்களூரு விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டது.