திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் ரூ.174.39 கோடி செலவில் 11 துறைகள் சார்ந்த 90 முடிவுற்ற திட்டப்பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் விழா மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,”அனைத்து மதத்தைச் சேர்ந்தவர்களும் மதநல்லிணக்கத்தோடு வாழும் தமிழ்நாட்டில் மதத்தை பயன்படுத்தி எதுவுமே செய்யமுடியவில்லையே என்று கதறுகிறது மதவாத கூட்டம். தமிழ்நாடு பெரியார், அண்ணா, கலைஞரின் மண். இங்கு மத அரசியல் எடுபடாது” என்றார். தொடர்ந்து பேசிய அவர், ”பிரதமர் […]
திருப்பத்தூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருப்பத்தூர் மாவட்டத்தில் மண்டவாடி என்னுமிடத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.174.39 கோடி செலவில் முடிவுற்ற 90 திட்டப் பணிகளைத் திறந்து வைத்தார். மேலும், ரூ.68.76 கோடி மதிப்பீட்டில் 60 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, 1,00,168 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் விழா மேடையில் பேசி வரும் முதல்வர் ஸ்டாலின் திருப்பத்தூர் மாவட்டத்திற்கு 5 புதிய திட்டங்களை அறிவித்துள்ளார். ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.30 […]
திருப்பத்தூர் : மாவட்டம், வாணியம்பாடி அருகே கொத்தகோட்டையில் பள்ளி செல்ல காத்திருந்த மாணவியை அரசு பேருந்து ஓட்டுநர் ஏற்றாமல் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தி இருந்தது. இன்று காலை 12 படிக்கும் அந்த மாணவி தேர்வு எழுதுவதற்காக பள்ளி செல்ல பேருந்துக்காக காத்திருந்தார். அந்த பகுதியில் பொது போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு என்பதால், அவர் அரசு பேருந்தை மட்டுமே நம்பியிருந்தார். அந்த நேரத்தில் பேருந்து வரும் நேரத்தில் அவர் நின்றுகொண்டிருந்த போதிலும் அரசு பேருந்தின் ஓட்டுநர் […]
திருப்பத்தூர் : சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி இதுவரை சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வி அடைந்த நிலையிலும் தனித்தே போட்டியிட்டு வருகிறது. மேலும், எந்தவித கூட்டணிகளிலும் இணையாதது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கையில், கட்சியின் நடவடிக்கைகள் பிடிக்காமல் சில நிர்வாகிகள் கடந்த சில மாதங்களாக அந்தக் கட்சியிலிருந்து வெளியேறிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிடுவதால் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளர் தேவேந்திரன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நாதகவில் இருந்து விலகுவதாக அறிவித்து செய்தியாளர் […]
தனியாக வீட்டிலிருந்த 80 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்த 62 வயது முதியவர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். வயதானவர்கள் என்றாலே பாவம் போல பார்க்கக்கூடிய காலம் போய், தற்பொழுது அவர்களையும் இரக்கமின்றி பலாத்காரம் செய்ய கூடிய கொடூரர்கள் இந்த உலகத்தில் நிறைந்துவிட்டார்கள். 80 வயதுடைய நாகம்மாள் எனும் மூதாட்டி கணவனை இழந்து திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வருகிறார். இவரது அண்டை வீட்டில் 62 வயதான பார்த்திபன் எனும் முதியவரும் வசித்து வருகிறார். இந்நிலையில், குடிபோதையில் இருந்த […]
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்து உள்ள கொத்தகோட்டை பகுதியில் நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. அதில் சின்னப்பள்ளி குப்பம் பகுதியை சார்ந்த ராமன் என்பவரின் காளை மாடு கிணற்றில் தவறி விழுந்து இறந்தது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்து உள்ள கொத்தகோட்டை பகுதியில் நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது.இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்து கொண்ட சின்னப்பள்ளி குப்பம் பகுதியை சார்ந்த ராமன் என்பவரின் காளை மாடு மஞ்சுவிரட்டின் போது தவறி கிணற்றில் விழுந்தது. தவறி விழுந்த காளை மாடு உயிரிழந்தது.இந்நிலையில் […]