சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த லட்டு தயாரிப்பில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பைப் பயன்படுத்துவதாக முன்னாள் முதலைவரான சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி இருக்கிறார். திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் உலகம் முழுவதும் உள்ள பகதர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் திருப்பதியில் வழங்கப்படும் பிரசாத லட்டில் மாட்டு […]
திருப்தி ஏழுமலையான் கோயிலில் ஊரடங்கு தடை அமல்ப்படுத்தபட்ட காலத்தில் தரிசனத்திற்குகாக முன்பதிவு செய்த டிக்கெட்களை பக்தர்கள் ரத்து செய்தனர். இந்நிலையில் இது குறித்து தேவஸ்தானம் ஊரடங்கு காலத்தில் முன்பதிவு செய்த டிக்கெட்களை ரத்து செய்தவர்களின் டிக்கெட் முன்பணத்தை திரும்ப வழங்குவதற்கான கால அவகாசம் டிச.,வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டை வைத்து எப்போது வேண்டுமானாலும் காண்பித்து தரிசனம் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது. மேலும் டிக்கெட்டை ரத்து செய்யும் படி கேட்கும் பக்தர்களுக்கு வங்கிக்கணக்கில் பணம் திருப்பி […]
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் அதிகம் செல்வார்கள் அங்கு நடக்கும் நிகழ்ச்சிகளை காண ஆர்வம் கொள்வார்கள் இந்நிலையில் வேங்கடேசப் பெருமாளுக்கு அன்றாட நடைபெறும் நிகழ்ச்சிகளைத் பக்தர்களுக்கு வேங்கடேஸ்வரா என்கிற பக்தி சேனல் (எஸ்.வி.பி.சி)என்று ஒளிபரப்பி வருகிறது. இந்த சேனலில் சுப்ரபாதம், கல்யாணோத்ஸவம், சகஸ்ரதீப அலங்கார சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. திருப்பதி செல்ல வேண்டும் அங்கு திருப்பதியானை தரிசிக்க வேண்டும் அவருக்கு நடைபெறும் சேவைகளை தரிசிக்க வேண்டும் என்று எண்ணும் பக்தர்கள் ஏராளம் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலி கருடசேவை தரிசனம் நடந்தது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி இரவு கருட சேவையை நடந்து வருகிறது. பிரம்மோற்சவத்தை கருட சேவையைகண்டு வழிபட வாய்ப்பில்லா பக்தர்கள் பவுர்ணமி கருட சேவையில் ஏழுமலையானை தரிசனம் செய்வார்கள். நேற்று பவுர்ணமியையொட்டி நேற்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை கருட சேவை நடந்தது. இதில் கருட வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளி மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள் […]
சந்திர கிரகணத்தையொட்டி வரும் 31 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோயில் மூடப்படுகிறது. அன்று காலை 11 மணி முதல் இரவு 10.30 மணி வரை கோயில் நடை மூடப்படும்என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திவ்ய தரிசனம் மற்றும் மூத்தகுடிமக்களுக்கான தரிசனமும் 31ஆம் தேதி அன்று ரத்து செய்யப்படுகிறது என திருப்பதி தேவஸ்தானத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.