நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். 2023ஆம் ஆண்டு பள்ளியில் படித்து வந்த சின்னதுரையை வேறு சமுதாய மாணவர்கள் வீடு புகுந்து வெட்டிய விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், ஆன்லைன் மூலம் பழகிய சிலர், அவரை தனியாக வரவழைத்து மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், படுகாயமடைந்த சின்னதுரை ஆஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி பகுதியைச் சேர்ந்த மாணவன் சின்னதுரையிடம் கிரிண்டர் […]