திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதியில் தேர்தலை ரத்து செய்யக்கோரி சுயேட்சை வேட்பாளர் திருப்பதி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். வாக்காளர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்படுவதாக கூறி தேர்தல் ரத்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார். திருச்சுழி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தங்கம் தென்னரசு, கடந்த 19ம் தேதி ஆவியூர் என்ற கிராமத்தில் பணம், பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இது […]
அதிமுக கூட்டணியில் சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகத்திற்கு திருச்சுழி தொகுதி ஒதுக்கீடு. அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு ஒவ்வொரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. நேற்று 171 பேர் கொண்ட சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டிருந்தது. அதற்கு முன்னதாக 6 பேர் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் சிறிய கட்சிகளுக்கு நேற்று மாலை முதல் பல்வேறு தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. அந்தவகையில் அதிமுக கூட்டணியில் சேதுராமனின் […]