கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், நாடெங்கிலும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் இயங்கி வந்த டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால், மதுபிரியர்கள் போதைக்கு ஆசைப்பட்டு,எத்தனால், சானிடைசர் என குடித்துவிட்டு உயிர்விட்ட சோக நிகழ்வுகளும் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது. இருந்தும் இந்த நிகழ்வுகள் குறைந்தபாடில்லை. நேற்றும், பெரம்பலூரில் 3 இளைஞர்கள் மதுக்கடைகள் திறக்காததால் போதைக்கு ஆசைப்பட்டு டிஞ்சரை (காயங்களை துடைப்பது போன்ற செயல்களுக்கு பயன்படும் மருத்துவ பொருள்) குடித்துள்ளனர். இதனால், தற்போது பெரம்பலூர் […]