டிக்கெட் முன்பதிவு தொடங்குவதில் சிக்கல் -நேரத்தை மாற்றி அறிவித்த ரயில்வே
15 சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு, மாலை 6 மணிக்கு தொடங்குகிறது என்று ரயில்வே அறிவித்துள்ளது. கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் அனைத்து போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஏப்ரல் 20-ம் தேதிக்குப் பின் ஊரடங்கில் பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், மத்திய ரயில்வே அமைச்சகம் நேற்று ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. அதில், பயணிகள் ரயில் படிப்படியாக தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]