10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணையை தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டார். தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை திட்டமிட்டபடி தொடங்குவதா அல்லது ஒத்திவைப்பதா என்பது குறித்து முதல்வர் பழனிசாமியுடன் அமைச்சர் செங்கோட்டையன் இன்று ஆலோசனை நடத்தினர். ஆலோசனைக்கு பின்னர் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 3 மணிநேரம் நடைபெறவுள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்தப்படும் என அறிவித்துள்ளார். மேலும், இந்த தேர்வுக்கான அட்டவணையை அவர் வெளியிட்டார். அதன்படி, […]
ஜனவரி 12ம் தேதி சென்னை எழும்பூரில் இருந்து கேரளா கொச்சுவேலிக்கு, முழுவதும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் கொண்ட ரயில் இயக்கம் எனவும்,ஜனவரி 12ம் தேதி காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து புறப்படும் ரயில் கொச்சுவேலியை இரவு 10.50க்கு சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை சென்ட்ரலில் இருந்து நாளை காலை 7.15க்கு புறப்பட வேண்டிய சதாப்தி எக்ஸ்பிரஸ் காலை 9.15க்கு புறப்படும்.அதேபோன்று நெல்லையிலிருந்து நாளை காலை 7.20க்கு புறப்பட வேண்டிய தாதர் வாராந்திர விரைவு ரயில் 8.50க்கு புறப்படும். கோவை – சென்ட்ரல் சதாப்தி விரைவு ரயில் நாளை மாலை 3.25க்கு பதில் மாலை 5.25க்கு புறப்படும் .மேலும் கோவை விரைவு ரயில் நாளை பிற்பகல் 2.55க்கு பதில் மாலை 5.10க்கு சென்னைக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு செய்துள்ளது