மத்தியப் பிரதேசத்தில் புலியை எதிர்த்துப் போராடி தனது 15 மாத மகனைக் காப்பாற்றிய தாய். தாய்மார்கள் தன் குழந்தையைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்லவும் தயாராக இருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில், மத்தியப் பிரதேச கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் புலியிடமிருந்து இருந்து தனது 15 மாத மகனைக் காப்பாற்றிய சம்பவம் நடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை, மத்தியப் பிரதேச கிராமத்தைச் சேர்ந்த அர்ச்சனா சௌத்ரி என்ற பெண், தனது மகன் ரவிராஜை வயலுக்கு அழைத்துச் சென்றபோது, இந்த […]
நீலகிரி மசினகுடியில் வனத்துறையிடம் சிக்காத ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நீலகிரி கூடலூரில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல தமிழக முதன்மை வன அதிகாரி சேகர் குமார் நீரஜ் உத்தரவு பிறப்பித்துள்ளளார். டி23 என்ற புலி இதுவரை 4 பேரை கொன்றுள்ளது. கடந்த 7 நாள்களாக வனத்துறையினர் வைத்து கூண்டுகளில் புலி சிக்காததால் சுட்டுக்கொல்ல வனத்துறை உத்தரவிட்டுள்ளது. 13 வயதான புலி கடந்த 4 நாட்களுக்கு மேலாக வனத்துறையின் வலையில் இருந்து தப்பித்து […]
அமெரிக்காவில் உள்ள மிருகக்காட்சி சாலை புலிகள், கரடிகளுக்கு பரிசோதனை நோக்கத்தில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள ஓக்லாண்ட் மிருக காட்சி சாலையில் இருக்கும் புலிகள் மற்றும் கரடிகளுக்கு பரிசோதனை நோக்கில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஜிஞ்சா, மோலி ஆகிய 2 புலிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மேலும் அந்த மிருகக்காட்சி சாலையில் இருந்த மலை சிங்கங்கள், மரநாய்கள், கரடிகள் ஆகியவற்றிற்கு கொரோனா தடுப்பூசி பரிசோதனை முறையில் செலுத்தப்பட்டுள்ளது. சான் டீகோ […]
அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தின் மேற்கு ஹூஸ்டன் பகுதியில் புலி ஒன்று மக்கள் வசிக்கும் பகுதியில் குதுகலமாக நடந்து சென்றுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் மேற்கு ஹூஸ்டன் பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பாக புலி ஒன்று சுற்றித் திரிந்து உள்ளது. குடியிருப்பு அதிகம் நிறைந்த பகுதியில் நடந்து திரிந்த புலியை கண்ட மக்கள் அலறியடித்து கூச்சலிட தொடங்கியுள்ளனர். மேலும் இது குறித்து காவல் துறையினருக்கும் […]
முட்டாள்கள்.. மனித மூளை மூடப்படும் போது வாய் பேசிக் கொண்டே இருக்கும். புலியின் கோப கட்டுப்பாட்டை பாராட்டுங்கள். ஆனால் எதிர்காலத்தில் இப்படிப்பட்ட செயலுக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது. சுசந்தா நந்தா என்பவர் இந்திய வனத்துறை அதிகாரியாக ஒடிசா, கேடரில் பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவில் ஒரு புலி திடீரென்று சுவர் மீது குதித்து, அதன் மேல் நடந்து செல்கிறது. அதனை மக்கள் சத்தமாக பேசியபடியே […]
கூர்க்கியில், ஒரு காபி தோட்டத்தில் தனக்கு குளிப்பதற்காக வைக்கப்பட்ட தொட்டியை சோதனை செய்து, அதன்பின் குளிக்கும் புலி. இணையத்தில் வைரலாகும் வீடியோ. பொதுவாக ஆறு அறிவுள்ள மனிதர்களைப் போன்றே, ஐந்தறிவு உள்ள மிருகங்களும் சில விஷயங்களில் மிகவும் தெளிவாக செயல்படுகின்றன. எந்த ஒரு செயலை செய்தாலும், இது நமக்கு நன்மை பயக்குமா? இது சரியானதா? என்று பார்த்து செய்பவர்கள் மனிதர்கள். அதே போன்று ஒரு புலியும் தனக்கு குளிக்க வைத்திருந்த குளியல் தொட்டியை சோதனை செய்யும் வீடியோ இணையத்தில் […]
நாய்க்குட்டியை போல் புலிக்குட்டியை வாக்கிங் அழைத்து செல்லும் சிறுமி. நம்மில் பலரும் வீடுகளில் நாய், பூனை, முயல் என பல வகையான செல்ல பிராணிகளை வளர்ப்பதுண்டு. நமது வீடுகளில் வளர்க்கும் நாயை வாக்கிங் கூட்டி செல்வதும் உண்டு. இந்நிலையில், மெக்சிக்கோவில் சிறுமி ஒருவர் புலிக்குட்டியை செல்லப்பிராணியாக தனது வீட்டில் வளர்த்து வந்துள்ளார். அந்த சிறுமி அந்த புலிக்குட்டியை, நாய்க்குட்டியை வாக்கிங் கூட்டி செல்வது போல புலிக்குட்டையையும் வாக்கிங் கூட்டி சென்றுள்ளார். சிறுமியின் இந்த செயலை பார்ப்பவர்கள் அதிர்ச்சியில் […]
சாராயம் காய்ச்ச இடையூறாக இருந்த புலிகளுக்கு, இளைஞர்கள் செய்த விபரீதமான செயல். சமீப காலமாக, விலங்குகளுக்கு எதிராக மக்கள் பல கொடூரமான செயல்களில் ஈடுபட்டு வருகினற்னர். தங்களுக்கு இடையூறு விளைவிக்கும் விலங்குகளை ஈவு இரக்கமின்றி, மிகவும் கொடூரமாக கொன்று விடுகின்றனர். அந்த வகையில், மஹாராஸ்டிரா புலிகள் காப்பக வனப்பகுதியில் தாய் மற்றும் இரண்டு குட்டி புலிகள் அப்பகுதியில், கள்ளச்சாராயம் காய்ச்சி வந்த இளைஞர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்து வந்துள்ளது. இதனையடுத்து இந்த இளைஞர்கள் பன்றியை கொன்று, அதில் விஷம் […]
பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் 7 பூனைகளுக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.கொரோனா தனது கோர முகத்தை அமெரிக்கா, இத்தாலி , பிரான்ஸ் போன்ற நாடுகளில் காட்டி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா பாதிப்பால் 8 லட்சத்திற்க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 47,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அங்கு உள்ள பிரபல பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவில் ஏராளமான விலங்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த மார்ச் மாத இறுதியில் அந்த […]
சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸ் நோயானது, மற்ற நாடுகளிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால், அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மனிதர்களை மட்டுமே தாக்கிய இந்த கொரோனா வைரஸ் நோயானது தற்போது முதன் முதலாக விலங்குகளை தாக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புரோன்ஸ் உயிரியல் காப்பகத்தில் உள்ள 4 வயது பெண் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகில் […]
கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிவமோகா மாவட்டத்தை சேர்ந்தவர், ஸ்ரீகாந்த் கவுடா. விவசாயியான இவர், அவரின் தோட்டத்தில் காபி மற்றும் பாக்கு மரங்களை வைத்துள்ளார். இந்நிலையில், அவரின் தோட்டத்தில் குரங்கு தொல்லை நிறைய இருந்து வந்துள்ளது. இதனையடுத்து, குரங்கிடம் இருந்து பயிர்களை காப்பதற்கு அவர் கோவாவில் இருந்து புலி உருவ பொம்மைகளை வாங்கி வைத்துள்ளார். அனால், அது நள்ளிரவில் நிறம் மாறிவிடுவதால் குரங்குகள் மீண்டும் தோட்டத்திற்குள் நுழைந்து பயிர்களை செத்த படுத்தியுள்ளது. இதனையடுத்து, அவர் தான் வளர்க்கும் நாய் […]
தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு புத்தர் கோவிலில் புலிகள் அதிக அளவில் வளர்க்கப்பட்டு வந்தன. அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட புலிகள் வளர்ப்பு பிராணிகள் போல அங்குள்ளவர்களால் வளர்க்கப்பட்டு வந்ததால் அந்த குறிப்பிட்ட புத்தர் கோயிலை சுற்றுலாவாசிகள் புலிகள் கோவில் என்றே அழைக்கபடுகின்றன. இந்த காப்பகத்தில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்க புலிகள் முறைகேடாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. மேலும் அப்புலிகளை தவறான செயலுக்கு பயன்படுத்துகின்றனர் என குற்றம் கூறி தாய்லாந்து அரசு அப்புலிகளை மீட்டு வனக்காப்பகத்திற்கு அழைத்து சென்றனர். […]
சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பிறந்த 3 சிங்கக்குட்டிகளுக்கும் , 4 புலிக்குட்டிகளுக்கும் இன்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார். அதன் படி ஒரு ஆண் சிங்கக்குட்டிக்கு பிரதீப் என்றும் , 2 பெண் சிங்கக்குட்டிகளுக்கு நிரஞ்சனா , தக்சனா என பெயர் வைத்தார். மேலும் 2 ஆண் புலிக்குட்டிகளுக்கு மித்ரன் , ரித்விக் எனவும் ,2 பெண் புலிக்குட்டிகளுக்கு யுகா , வெண்மதி என பெயர் சூட்டினார். இதை […]
உத்தரபிரதேச மாநிலம் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது, ஒரு இடத்தில் ஒரு பெண் சிறுத்தைப்புலி மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்தனர். உடனே, வனச்சரகர் தயா சங்கர் திவாரிக்கு தகவல் தெரிவித்தனர். திவாரி, தனது உதவியாளர்களுடன் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டார். பெண் சிறுத்தைப்புலியை ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல கூண்டு அனுப்புமாறு மண்டல வன அதிகாரியிடம் தொலைபேசியில் கேட்டுக்கொண்டார். ஆனால், கூண்டு வர தாமதம் ஆனது. சிறுத்தையின் உடல்நிலையும் மோசமாகிக்கொண்டிருந்தது. […]