மதுரையில் டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து ‘டைடல் பார்க்-ஐ’ அமைக்கிறது என முதலமைச்சர் அறிவிப்பு மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் விடுதியில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் “தோள் கொடுப்போம் தொழில்களுக்கு” மாநாடு துவங்கி நடைபெற்று வருகிறது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை சார்பில் நடக்கும் தென்மண்டல மாநாட்டில் தொழில்துறையின் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மதுரை மாட்டுத்தாவணியில் ‘டைடல் பார்க்’ அமைக்கப்பட உள்ளது என அறிவித்துள்ளார். […]