பேருந்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பெற்றோர்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி இருக்கை பெற்றுக்கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை அறிவிப்பு. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இனிமேல் டிக்கெட் இல்லாமல் இலவசமாக பயணிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கடந்த சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். இந்த நிலையில், பேருந்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்ட நிலையில் பெற்றோர்கள் விருப்பப்பட்டால் கட்டணம் செலுத்தி இருக்கை பெற்றுக்கொள்ளலாம் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக […]