சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரை 11ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று இரண்டாவது நாளில் மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும் இரங்கல் தீரமானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து இன்று (ஜனவரி 8 ) ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் பேசவிருக்கிறார்கள். 11ம் தேதி முதல்வர் பதிலுரை அளிப்பார். அத்துடன் கூட்டம் நிறைவு பெறுகிறது. நேபாளம் திபெத் எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த […]
நேபாளம் : மற்றும் திபெத் எல்லைப் பகுதியில் ஜனவரி 7, 2025 அன்று காலை 6:35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், நேபாளத்தின் லாபுசே நகரிலிருந்து 93 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டது எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென நிலநடுக்கம் ஏற்பட்ட காரணத்தால் நேபாளத்தின் காத்மாண்டு நகரில் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறினர். இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் இந்தியாவின் டெல்லி, பீகார், அசாம் உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டன […]
நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர் அளவுகோளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதில், 93 கிலோமீட்டர் தொலைவில் ஏற்ப்பட்ட காரணத்தால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்தனர். இந்த நிலநடுக்கத்தால் இந்தியா, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளில் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கின. தற்பொழுது, நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95ஆக அதிகரித்தூள்ளது. மேலும் 130 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கத்தால் நேபாளம், திபெத் பகுதிகளில் சேதமடைந்த […]
நேபாளம்: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்ப்பட்டுள்ளது. இமயமலையின் அடிவாரத்தில் உள்ள நேபாளம் – திபெத் எல்லையில், இன்று (ஜன.7) காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 60-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இன்று காலை நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக பதிவாகி இருந்தது. ஏற்கெனவே, நிலநடுக்கம் ஏற்பட்ட அதே இடத்தில் மீண்டும் நில அதிர்வு ரிக்டரில் 4.5ஆக பதிவாகியுள்ளது. அதன்படி, […]
டெல்லி: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று காலை 6.30 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இமயமலையின் அடிவாரத்தில் இருக்கும் நேபாளத்தில் பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.1 எனப் பதிவாகியிருக்கிறது. நேபாள-திபெத் எல்லைக்கு அருகில் உள்ள லோபூச்சிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் நிகழ்ந்திருக்கிறது என யுனைடெட் ஸ்டேட்ஸ் ஜியோலாஜிக்கல் சர்வே அமைப்பு தெரிவித்திருக்கிறது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பீகார், அஸ்ஸாம் உள்ளிட்ட பல பகுதிகளில் உணரப்பட்டிருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து வீடுகளை விட்டு வெளியே […]
நேபாளம் மற்றும் பூடானில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக திபெத் பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக நேபாளத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் திபெத்தின் எல்லையில் இருக்கும் சிந்துபால்சவுக் மாவட்டத்தின் மேலம்சி மற்றும் இந்திராவதி ஆகிய ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கிருக்கும் வீடுகள், சாலைகள் ஆகியவை அடித்து செல்லப்பட்டன. மேலும், இந்த வெள்ளத்தில் கரையோர மக்கள் பலர் அடித்து செல்லப்பட்டது […]
திபெத்தில் பிரிவினைவாதத்திற்கு எதிராக ஒரு “அசைக்க முடியாத கோட்டையை கட்ட வேண்டும் “என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். திபெத்தை 1959 ஆம் ஆண்டு சீனா கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் சீன ராணுவமே அங்கு எல்லை பணியில் ஈடுபட்டு வருகிறது.சீனாவின் கட்டுக்குள் திபெத் வந்த முதல் அவ்வபோது வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. சீனாவிற்கு எதிரான எதிர்ப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது .சீனாவை பொருத்தவரை திபெத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்றே கூறி […]
இந்தியாவுக்கும் திபெத்துக்கும் இடையிலான உறவு நிரந்தரமானது. இந்தியா திபெத் சீனா உலகளாவிய அமைதியை ஒருங்கிணைக்கிறது” என்ற தலைப்பில் பாரத் சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் திபெத் அரசாங்கத்தின் பிரதிநிதி டாக்டர் லோப்சாங் சங்கே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடந்தால் சீனா தனியாக இருக்கும் என்றும் உலகத் தலைமையால் இந்தியாவுக்கு ஆதரவு கிடைக்கும் என்றும், எந்தவொரு போரும் தொடங்கினால் சீனா தோல்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் […]