தன்மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, பப்ஜி மதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். யூ -டியூப்பில் ஆபாசமான பேச்சுக்களை பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்த பப்ஜி மதனை, கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் மதன் மீது கடந்த ஜூலை மாதம் 6 ஆம் தேதி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு,அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். […]