மாஸ்க் அணிந்து சென்ற மர்ம நபர்கள் சாலையில் சென்ற நபர் மீது ஆசிட் வீசி சென்றுள்ளனர். ஹரியானா மாநிலம் பானிபட் எனும் இடத்தில் போர்வை கம்பெனியில் வேலை செய்ய கூடியவர் தான் 37 வயது பெண்மணி, இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளது. இவர் வேலை முடிந்து 6.30 மணியளவில் கணவருடன் பைக்கில் வீடு திரும்பியுள்ளார். அப்பொழுது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அப்பெண் மீது அசீட்டை வீசி சென்றுள்ளனர். உடனடியாக அவரை அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். […]