திரௌபதி பார்க்க வாங்க! பா.ரஞ்சித்திற்கு அழைப்பு விடுத்த இயக்குனர்!
இயக்குனர் மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் திரௌபதி. இந்த படத்தில் ரிஷி ரிச்சர்ட், ஷீலா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் நாடக காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் இயக்குனரான மோகன், மற்றும் விநியோகஸ்தர் மோகன் ஆகியோர், திரௌபதி படத்தை பார்க்க வருமாறு இயக்குனர் பா.ரஞ்சித்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆனால், இவர்களது அழைப்புக்கு ரஞ்சித் தரப்பில் இருந்து எந்த பதிலும் தெரிவிக்கவில்லை.