மாயா, ஐரா, ஆகிய திகில் நிறைந்த திரைப்படங்களை தொடர்ந்து நடிகை நயன்தாரா மீண்டும் ஒரு திகில் படத்தில் நடித்து வருகிறார். நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள நெற்றி கண் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் நடிக்கவுள்ளார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது. […]
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, அம்ருதா, ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் நடித்துள்ள படம் ‘காளி’. இப்படத்துக்கு ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் ஆண்டனியே இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். மேலும், விஜய் ஆண்டனியின் ஃபிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் மார்ச் 30ம் தேதி ரிலீஸாகவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.