திருச்சி : நேற்று திருச்சியில் பாஜக சார்பில் புதிய கல்வி கொள்கை பற்றி விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து பேசினார். தமிழக பட்ஜெட் மீதான விமர்சனம், தொகுதி மறுவரையறை குறித்த அனைத்துக்கட்சி கூட்டம் பற்றி விமர்சனம் என ஆவேசமாக பேசினார். அப்போது புதிய தேசிய கல்வி கொள்கை பற்றி தனது கருத்துக்களை குறிப்பிட்டார். இதுவரை 18 நாளில் மும்மொழிக்கு ஆதரவாக […]
திருச்சி : தமிழ்நாடு அரசு PM Shri திட்டத்தை ஏற்றுக்கொண்டால் மட்டுமே பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்க வேண்டிய நிதியை அளிக்க முடியும் என நோக்கத்தோடு மத்திய கல்வி அமைச்சகம் செயல்பட்டு வருகிறது. PM Shri திட்டமானது தேசிய கல்வி கொள்கையின் மும்மொழி கொள்கையை ஆதரிக்கும் வண்ணம் உள்ளது என தமிழக அரசு அதனை ஏற்க மறுக்கிறது. மும்மொழி கொள்கை எனக் கூறும் PM Shri திட்டத்தில் ஹிந்தி கட்டாயம் இல்லை என்றும் இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை படிக்கலாம் […]
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 – 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இதுவே தற்போது ஆளும் திமுக அரசு தாக்கல் செய்யும் கடைசி முழு பட்ஜெட் ஆகும். 2026ஆம் ஆண்டு தேர்தல் வரும் என்பதால் அப்போது இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள […]
சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இடையிலான வார்த்தை மோதல் திவரமடைந்துள்ளது. முன்னதாக, அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மும்மொழி கற்பிக்கும் பள்ளியில் படிப்பதாகவும், திமுக அமைச்சர்களின் குழந்தைகள் பெரும்பாலும் ஆங்கில வழியில் படிப்பதாகவும் அண்ணாமலை விமர்சித்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், ‘பழனிவேல் தியாகராஜன், தனது குழந்தைகள் இருமொழிக் கொள்கையின் கீழ் படித்ததாகவும், அதில் தமிழ் இல்லை என்பது அண்ணாமலையின் […]
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு வெளிப்படையாகவே முயற்சித்து வருகிறது. பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழகம் இணையவில்லை அதனால் தான் தமிழகத்திற்கான நிதி ஒதுக்க முடியவில்லை என மத்திய அமைச்சர் வெளிப்படையாகவே கருத்து தெரிவித்து பரபரப்பை கிளப்பினார். மேலும், இதற்கு தமிழக அரசு ஒப்புக்கொண்டது எனவும் அவர் கூறி வருகிறார். இதனை மறுக்கும் திமுக எம்பிக்கள் மற்றும் மாநில திமுக அரசு, PM […]
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பூதாகரமாக எழுந்து நிற்கிறது. குறிப்பாக நாடாளுமன்றத்தில் பட்ஜெட் 2ஆம் கட்ட கூட்டத்தொடரில் இந்த விவகாரம் அதிகளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவாதத்தின் போது தமிழக எம்பிகளை நாகரீகமற்றவர்கள் என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் விமர்சித்து, அதன் பிறகு கண்டனங்கள் எழுந்த பிறகு அந்த கருத்துக்கு வருத்தம் தெரிவித்து அதனை திரும்ப பெற்றிருந்தார். இருந்தும், தர்மேந்திரா பிரதான் தமிழக அமைச்சர்கள் குறித்து கடும் விமர்சனம் […]
டெல்லி : இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் கட்ட அமர்வு தொடங்கியுள்ளது. இதில் இன்று கேள்வி பதில் நேரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரா பிரதான் பேசியது தற்போது பேசுபொருளாகி உள்ளது மட்டுமின்றி திமுகவினர் மத்தியில் கொந்தளிப்பபை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு யூ-டர்ன் : இன்று கேள்வி பதில் நேரத்தில் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ” முதலில் PM Shri திட்டத்தில் கையெழுத்திட வந்த தமிழ்நாடு, கடைசி நேரத்தில் யூ- டர்ன் […]
சென்னை : விமான நிலையங்கள், துறைமுகங்கள், பல்வேறு தனிநபர் பிரமுகர்கள் என பல்வேறு பாதுகாப்பு பணிகளில் ஈடுபடும் மத்திய தொழிலாக பாதுகாப்பு படையான CISF படையினரின் 56வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்தவிழாவில் பங்கேற்க ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே தக்கோலத்தில் அமைந்துள்ள CISF மண்டல பயிற்சி மையத்திற்கு மத்திய அமைச்சர் அமித்ஷா வந்துள்ளார். இங்கு CISF வீரர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் சைக்கிள் பயணத்தையும் தொடங்கி வைக்கிறார். மத்திய அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு […]
சென்னை : மத்திய அரசு அறிமுகம் செய்த தேசிய கல்வி கொள்கை 2020-ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையாததால் தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு அளிக்க வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது என்றும் , பிஎம் ஸ்ரீ திட்டம் மூலம் மும்மொழி கொள்கை கோட்பாடை மத்திய அரசு அறிமுகம் செய்து அதன் மூலம் இந்தி மொழியை திணிக்க முற்படுகிறது என திமுக மட்டுமின்றி பல்வேறு கட்சிகளும் மத்திய அரசின் இந்த போக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து […]
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு இருமொழிக் கொள்கையே போதுமானது என்கிற நிலைப்பாட்டில் தமிழ்நாட்டை ஆளும் திமுக மட்டுமின்றி பெரும்பாலான அரசியல் கட்சிகள் ஒரே கோட்டில் உள்ளன. இப்படி இருக்கையில், ஆந்திராவில் 10 மொழிகளை கற்றுத்தரப்போகிறேன் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறிருக்கிறார். டெல்லி சென்றுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, மாநிலத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து மத்திய அமைச்சர்களை சந்தித்து பேச்சு […]
சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய அரசு இந்தி மொழியையே திணிக்க பார்க்கிறது என தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது. இதற்கிடையில், தமிழ்நாடு முழுவதும் 90 நாட்கள் நடைபெறவுள்ள கையெழுத்து இயக்கத்தை நேற்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தொடங்கி வைத்தார். இன்று பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை எம்ஜிஆர் நகர் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு […]
சென்னை : மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையின் படி பள்ளி குழந்தைகள் தாய் மொழி, ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு இந்திய மொழியை படிக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய அரசு இந்தி மொழியையே திணிக்க பார்க்கிறது என தமிழ்நாட்டில் பிரதான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆளும் திமுக அரசு மும்மொழி கொள்கையை ஆதரிக்கும் PM Shri திட்டத்தில் இணையாததன் காரணமாக தமிழகத்திற்கு […]
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21 அன்று சர்வதேச தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோ (UNESCO) 1999ல் இந்த நாளை மொழிவழி உரிமைகளுக்காக உயிரிழந்தவர்களை நினைவுகூர அறிவித்த நிலையில், அப்போதிலிருந்து கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று தாய்மொழி தினம் என்பதால் சமூக வலைத்தளங்களில் அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் ” எம்மொழிக்கும் சளைத்ததல்ல எம் மொழி! இலக்கியங்களில் […]
டெல்லி : கடந்த சனிக்கிழைமை வாரணாசியில் காசி தமிழ் சங்கமத்தின் மூன்றாவது பகுதி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்,“ புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழக கல்வித்துறைக்கு நிதி தர இயலாது. தமிழ்நாடு அரசு, அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டால் நிதி விடுவிக்கப்படும்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், மும்மொழிக் கொள்கையை பிறமாநிலங்கள் ஏற்கும் போது தமிழ்நாடு மட்டும் ஏற்க மறுப்பது ஏன்? என அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியது பெரிய […]