மூன்று கண்களுடன் பிறந்த பூனை வைரலாகும் வீடியோ!!
இணையத்தை பரபரப்பாக்கிய மூன்று கண்களுடன் பிறந்த பூனைக்குட்டி. இயற்கையின் படைப்புகள் எப்போதுமே நம்மை ஆச்சரியத்தில் உறைய வைக்கக்கூடியது. அதனை உண்மையாக்கும் வகையில் சமூக ஊடகங்களில் மூன்று கண்களுடன் பிறந்த பூனைக்குட்டியின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், பெண் ஒருவர் தனது கைகளில் பூனைக்குட்டியை வைத்திருப்பதையும், அந்த பூனைக்குட்டிக்கு மூன்று கண்கள் இருப்பதையும் காட்டுகிறது. இதேபோன்று வியப்பூட்டும் வகையில், மத்தியப் பிரதேசத்தின் ஷிவ்பூர் மாவட்டத்தில், கால்களுக்குப் பதிலாக கொம்புகளுடன் பிறந்த குழந்தையின் வீடியோ வைரலானது.