ஈரோடு பெருந்துறை தொகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு இயந்திரத்தின் வரிசையை மாற்றி வைத்ததாக புகாரளித்த தோப்பு வெங்கடாச்சலம், வாக்குபதிவை நிறுத்தி, பூத் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் பலரும் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். சில இடங்களில் இயந்திர கோளாறு காரணமாக வாக்குப்பதிவு தொடங்காத நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை முதலே பொதுமக்களுடன் […]