தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலத்திற்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. அதற்கு பதிலாக ஜெயக்குமார் என்பவர் போட்டியிட்ட நிலையில், தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அவர் 9 ஆயிரத்து 791 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். இந்நிலையில், இன்று காலை 10:30 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் […]