தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இது தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்தியது. பி்ன்னர் தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலன் விசாரணை பிரிவு அளித்த அறிக்கை மற்றும் தமிழக அரசு அளித்த அறிக்கை அடிப்படையில் இந்த வழக்கைத் தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து […]
துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை. துப்பாக்கிச்சூடு தொடர்பாக குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொலை செய்த காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படும். குற்றவியல் நடவடிக்கை […]
ரஜினியிடம் கட்டாயம் விசாரணை நடைபெறும் என அருணா ஜெகதீசன் ஆணையத்தின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக, ரஜினிகாந்திடம் ஏற்கனவே விசாரணை ஆணையம் சார்பாக 15 கேள்விகள் கேட்கப்பட்டன. அந்த 15 கேள்விகளுக்கும் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார் ரஜினிகாந்த் என்று அருணா ஜெகதீசன் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் கூறியுள்ளார். மேலும், கொரோனா பாதிப்பு குறைந்த பின்னர் ரஜினியிடம் கட்டாயம் விசாரணை நடைபெறும் என்று விசாரணை ஆணையம் தெரிவித்துள்ளது.