தூத்துக்குடி துப்பாக்கிசூடு சம்பவத்தில் 21 அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை தொடங்கியுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாட்டையே உலுக்கியது. இதுதொடர்பாக சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், பின்னர் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. அதன்படி, இந்த வழக்கை சிபிஐ […]
தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதலாக தலா 5 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவு. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியோடு, மேலும் கூடுதலாக தலா 5 லட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான அறிக்கையில், தூத்துக்குடியில் கடந்த 2018ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் […]
ஜெயலலிதா மரணம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி விசாரணை அறிக்கை கூட்டத்தொடரின் இறுதி நாளில் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் அப்பாவு தலைமையில் அடுத்த மாதம் 2வது வாரத்தில் கூட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கூட்டத்தொடரை 5 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. 6 மாதத்துக்கு ஒருமுறை சட்டப்பேரவை கூட்ட வேண்டும் என பேரவை விதி உள்ளதால் அக்டோபரில் கூட்டத்தொடர் நடக்க வாய்ப்பு உள்ளது. தமிழக சட்டப்பேரவை […]
தூத்துக்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக டிஜிபி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கலவரத்தில் 72 போலீசார் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு தொடர்பாக டிஜிபி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள அம்சங்கள் வருமாறு:- தூத்துக்குடியில் கலவரம் ஏற்பட்டதையடுத்து, பொது மக்களின் உயிரை காப்பாற்றவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. கலவரத்தின்போது சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக 185 […]