தூத்துக்குடியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று கீழ்காணும் கோரிக்கைக்களை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில் அவர்கள் அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் , அரசனை (G.O ) 56_யை இரத்து செய்ய வேண்டும் , அரசு ஊழியர்கள் போராட்டாத்தில் ஈடுபாடாதல் கைது செய்யப்பட்ட ஜாக்டோ_ ஜியோ நிர்வாகிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற முழக்கங்களளை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். […]