தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (01.02.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நாளை (02.02.2024) தமிழகத்தில் ஓரிரு […]
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரையில் ஒரு சில இடங்களில் மீதமானது முதல் லேசான சாரல் மழை வரை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மாநகரத்தில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. வணிக சிலிண்டர் விலை 12.50 ரூபாய் உயர்வு.! பிப்ரவரி மாதம் பருவம் தவறி பெய்து வரும் மழை காரணமாக தூத்துக்குடியில் உப்பள தொழில் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மதம் முதல் தான் உப்பு விளைச்சல் நன்றாக ஆரம்பமாகும் காலம் […]
கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்வேறு பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ளநீர் ஊருக்குள் புகுந்ததால், இரு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்தன. அந்த வெள்ள பாதிப்பில் இருந்து தற்போது வரை மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 21ஆம் தேதியன்று முதல்வர் மு.க.ஸ்டாலின், இரு மாவட்டத்திற்கும் நேரில் சென்று பார்வையிட்டார். அதன் பின்னர் பல்வேறு […]
கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார் நடிகர் விஜய். கடந்த 17,18 ஆகிய தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. வரலாறு காணாத கனமழையால், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், வெள்ளத்தால் ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து தவிப்புக்கு ஆளாகியுள்ள மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில், நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை நேரடியாக வழங்க […]
தென்மாவட்ட கனமழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்ட்டன . தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க, பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி வந்திருந்தார். தூத்துக்குடியில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டபின்னர் பேசுகையில், இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று சொல்கிறார்கள். நான் இப்போது நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக […]
தென்மாவட்டத்தில் பெய்த் அதீத கனமழை காரணமாக தூத்துக்குடி , திருநெல்வேலி மாவட்ட மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர். தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அதன் வழித்தடத்தில் இருந்த பல்வேறு நீர்நிலைகள் நிரம்பி, பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. தற்போது ஒருசில முக்கிய பகுதிகளை தவிர மற்ற இடங்களில் ஓரளவுக்கு இயல்புநிலை திரும்பினாலும், இன்னும் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பாமல் தவித்து வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் […]
தென் மாவட்டத்தில் பெய்த அதீத கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பெரு வெள்ளத்தால், உயிர்சேதம், பொருட்சேதம், கால்நடை உயிர்சேதம் என பெருமளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு இடங்களில் தேங்கிய தண்ணீரை வெளியேற்றும் முயற்சியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இரு மாவட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு பின்னர் வெள்ள நிவாரண உதவி தொகை விவரங்களை அறிவித்தார். ரேஷன் கார்டுதரர்களுக்கு தலா 6000 ரூபாய், […]
கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் தென்மாவட்டத்தில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அதன் வழித்தடத்தில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி இரு மாவட்டத்திலும் பல்வேறு ஊர்களில் வெள்ளநீர் புகுந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் கடந்த 6 நாட்களாக தொடர்ந்து வருகிறது. இன்னும் பல்வேறு இடங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து வருகின்றன. மக்கள் பிரதிநிதிகள் பலர் களத்தில் நின்று மீட்பு […]
தென்மாவட்டங்களில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலியில் பல்வேறு பகுதிகள் குறிப்பாக தாமிரபரணி ஆறு ஓடும் பகுதிகள் அனைத்தும் வெள்ளத்தால் பெருமளவு பாதித்துள்ளன. வெள்ளத்தால் தென்மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனால் பல்வேறு மாணவர்களின் முக்கிய சான்றிதழ்கள் நீரில் மூழ்கின. தமிழகத்தில் 28-ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்! இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வெகுவாக பாதிக்கப்ட்டனர். ஏனென்றால், அந்த ஒரிஜினல் கல்வி சான்றிதழ்களின் நகலை பெறுவதற்கு சாதாரண நாட்களில் மிகுந்த சிரமமாக […]
தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் . குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் கரையோர வழித்தடத்தில் இருந்த பகுதிகள் பெருபாலும் வெள்ளத்தில் சிக்கியுள்ளன. இன்னும் பல்வேறு இடங்களில் வெள்ள பதிப்புகளில் இருந்து மக்கள் மீண்டு வர தவித்து வருகின்றன. சென்னை எண்ணூர் முகத்துவாரத்தில் எண்ணெய் கசிவு! நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! தென்மாவட்ட வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் தூத்துக்குடி மற்றும் […]
தென் மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பெய்த கனமழையால் தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன. தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சில பகுதிகளும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. திருநெல்வவேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன. தூத்துக்குடி வெள்ளம் : 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம்.. யார் யார் எந்தெந்த பகுதிக்கு.? வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட மக்களுக்கு பலரும் தங்கள் உதவிகளை, நிவாரண பொருட்களை அனுப்பி […]
தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழையின் தாக்கம் இன்னும் பல்வேறு இடங்களில் நீடித்து கொண்டு இருக்கிறது. உதவிக்காகவும், மீப்பு பணிகளுக்காகவும், உணவுக்காவும் இன்னும் மக்கள் தவித்து வரும் சூழல் நிலவுகிறது. அவர்களை மீட்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தவித்து வரும் மக்களை மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர். வெள்ளத்தால் தனி தீவில் சிக்கியவர்களை போல் தவித்து வரும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. மீட்ப பணிகளை நேற்று முதல்வர் […]
சரியாக மழை முன்னெச்சரிக்கையை அறிவிக்காத சென்னை வானிலை ஆய்வு மைய அலுவலகத்தை பூட்டி விடலாம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்து உள்ளார். முன்னதாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை பெய்து பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. அதேபோல அடுத்ததாக தென்தமிழகத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அந்த மாவட்டத்தில் பெரும்பகுதிகள் வெள்ளத்தால் சூழ்ந்துள்ளன. மழை பாதிப்பின் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 22) -ஆம் தேதி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாக்குமரி மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் பெய்து வரும் கடும் மழை,வெள்ளத்தால் ஒட்டுமொத்த மக்களும் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து பரிதவிக்கிறார்கள். அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் 95 செ.மீ மழை ஒரே நாளில் பதிவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தாமிரபரணி ஆறு உள்ளிட்ட பல்வேறு […]
தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அமைச்சர் உதயநிதியுடன் இயக்குநர் மாரி செல்வராஜ் சென்றதற்கு விமர்சனம் எழுந்தது. இந்த விமர்சனத்திற்கு தன்னுடைய பாணியில் பதிலடி கொடுத்துள்ளார் நடிகர் வடிவேலு இது தொடர்பாக அவர் பேசுகையில், “அது அவன் ஊரு. அந்த ஊரில் பள்ளம், மேடு எங்கே இருக்கு என்பது அவனுக்குத்தான் தெரியும். அவன் ஊரில் வெள்ளம் வந்தா அவன் போகாமல் வேறு […]
தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. மழை ஓய்ந்த பின்னரும் இன்னும் பல்வேறு இடங்களில் மழைநீர் வெள்ளம் பல்வேறு இடங்களில் தேங்கி நிற்கிறது. மழைநீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி, திருநெல்வேலியில் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் நேரில் ஆய்வு செய்து […]
கடந்த ஞாயிற்று கிழமை முதல் திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் தத்தளித்த மக்களை மீட்க மீட்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மக்கள் உணவும், தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். மேலும், மூன்று நாட்களுக்கும் மேலாக மின்சரம் இல்லாமல் […]
கடந்த ஞாயிற்று கிழமை முதல் (டிசம்பர் 17 மற்றும் 18) திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடியில் வெள்ள சேதங்களை ஆய்வு செய்யும் முதலமைச்சரின் பயணத்தில் மீண்டும் மாற்றம் இன்றிரவு மதுரை சென்று அங்கிருந்து நெல்லை செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், தென் மாவட்ட […]
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதி மிக்ஜாம் கனமழையால் பாதிக்கப்பட்டு தற்போது மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் தற்போது தென்மாவட்ட பகுதி மக்கள் கனமழையால் வெகுவாக பாதிக்கப்பட்டுளள்னர். கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட பகுதியில் வெள்ள நீர் வீதிகளில் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது மழையளவு வெகுவாக குறைந்துள்ள காரணத்தால்வெள்ள நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தொடர் மழை காரணமாக நாளை வரையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வடதமிழகம் மற்றும் தென்தமிழகம் […]
கடந்த ஞாயிற்று கிழமை முதல் திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம் வெள்ளத்தால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மக்கள் உணவும், தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். மேலும், மூன்று நாட்களுக்கும் மேலாக மின்சரம் இல்லாமல் இருளில் வசித்து வரும் நிலையில், தூத்துக்குடி, நெல்லை உட்பட 4 […]