தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (01.02.2024) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நாளை (02.02.2024) தமிழகத்தில் ஓரிரு […]
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் நேற்று நள்ளிரவு முதல் இன்று அதிகாலை வரையில் ஒரு சில இடங்களில் மீதமானது முதல் லேசான சாரல் மழை வரை பெய்தது. குறிப்பாக தூத்துக்குடி மாநகரத்தில் பல்வேறு இடங்களில் சாரல் மழை பெய்தது. வணிக சிலிண்டர் விலை 12.50 ரூபாய் உயர்வு.! பிப்ரவரி மாதம் பருவம் தவறி பெய்து வரும் மழை காரணமாக தூத்துக்குடியில் உப்பள தொழில் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மதம் முதல் தான் உப்பு விளைச்சல் நன்றாக ஆரம்பமாகும் காலம் […]
கடந்த ஞாயிற்று கிழமை முதல் திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி , தென்காசி ஆகிய மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக இதுவரை வெள்ளம் தேங்காத பகுதிகளில் எல்லாம் மழைநீர் தேங்கி உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளத்தில் தத்தளித்த மக்களை மீட்க மீட்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மக்கள் உணவும், தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். மேலும், மூன்று நாட்களுக்கும் மேலாக மின்சரம் இல்லாமல் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதைபோல் ,தேனி மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை. விருதுநகர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை. அறிவிக்கப்பட்டுள்ளது.