தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்ற ஆர்ப்பாட்டத்தில், பல்வேறு கிறிஸ்தவ, இசுலாமிய, தலித் அமைப்புகளின் தலைவர்களும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகளும் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தையொட்டி, தக்கலை நகரம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.