அதீத கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட் தென்மாவட்ட மக்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை அளித்து வருவது போல பல்வேறு அரசியல் கட்சியினரும், தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளித்து வருகின்றனர். தற்போது பெரும்பாலான பகுதிகளில் இயல்பு நிலை திரும்பினாலும், இன்னும் பல்வேறு இடங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் தேவைப்படுகிறது. அதனை அறிந்து அவர்களுக்கு உதவிகள் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இன்று மக்கள் நீதி மய்யம் சார்பில் 12 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வெள்ள […]
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. அதைப்போல சென்னையை தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் கோவில்கள் மற்றும் வீடுகள் என பல சேதமடைந்தது. அதுமட்டுமன்றி இதில் சில மாவட்டங்களில் வெள்ளத்தால் சில மக்கள் உயிரிழக்கவும் செய்தனர். இதனையடுத்து, மழையால் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும், சேதமடைந்த குடிசைக்கு தலா ரூ.10,000, தூத்துக்குடி, திருநெல்வேலியில் மழை வெள்ளம் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ள சேதங்களை பார்வையிட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார். அப்போது தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் வெள்ளத்தை கையாள்வதில் திமுக அரசு தோல்வி அடைந்துள்ளது என்று பேசியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர் ” இந்த ஆட்சியை சேர்ந்தவர்கள் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது என்று சொல்கிறார்கள். நான் இப்போது நேரடியாக குற்றம்சாட்டுகிறேன் தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழக அரசு நடத்துகிறது. […]
தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த கனமழையால் பெரும்பாலான சாலைகள் பாதிப்படைந்து பேருந்து செல்லமுடியாத நிலைமை ஏற்பட்டது. மேலும், கடும் வெள்ள பாதிப்பால் ரயில்வே பாதைகள் சேதமடைந்தன. இதனால், தென் மாவட்டங்களில் ரயில்சேவை தற்காலியமாக ரத்து செய்யப்பட்டது. இப்பொது, மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட தூத்துக்குடியில் நாளை (டிச.22) முதல் ரயில் சேவைகள் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் தண்டவாளங்களில் நீரை அகற்றும் பணி நடைபெற்று வருவதால் […]
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் வீட்டிற்குள் தண்ணீர் புகுந்து மக்கள் தத்தளித்தனர். வெள்ளத்தில் தத்தளித்த மக்களை மீட்க மீட்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் இணைந்து திமுக எம்பி கனிமொழி நேரில் சென்று ஆய்வு செய்து உணவுகளை வழங்கி வருகிறார். தனது சொந்த நிதியில் இருந்து தினமும் சாப்பாடுகளை செய்து மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறார். தூத்துக்குடி மட்டுமின்றி எம்பி கனிமொழி கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளிலும் வெள்ளத்தால் சிக்கி […]
திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கியிருந்த மக்களை மீட்க வேண்டும் என்பதற்காக இய்குனர் மாரிசெல்வராஜ் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் இணைந்து கருங்குளம், முத்தலாங்குறிச்சி உள்ளிட்ட இடங்களுக்கு நேரடியாக சென்றார்கள். வெள்ளத்தில் இருந்து மக்களை மீட்க உதவி செய்தது குறித்து மாரிசெல்வராஜ் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவுகளையும் வெளியீட்டு இருந்தார். இதனையடுத்து, ஒரு தரப்பினர் மாரிசெல்வராஜுக்கு அங்கு என்ன வேலை […]