பெண்களை பணிக்கு அழைத்து சென்ற தனியார் வேன், தண்ணீர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழப்பு. தூத்துக்குடி மாவட்டத்தில் சில்லாநத்தம் பிரதான சாலையில் தனியார் நிறுவன வேனும், தண்ணீர் லாரியும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 4 பெண்கள் உயிரிழந்ததாகவும், 15 படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. புதியமுத்தூரில் இருந்து தனியார் நிறுவனத்துக்கு பெண் பணியாளர்களை ஏற்றி சென்ற வேன், எதிரே வந்த தண்ணீர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவலறிந்து […]