கன்னியாகுமரி : தூத்துக்குடி, கன்னியாகுமரிக்கு 3 நாள் பயணமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வந்துள்ளார். நேற்று கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அருகே உள்ள கண்ணாடி பாலத்தை திறந்து வைத்தார். இன்று குமரியில் திருக்குறள் கண்காட்சி அரங்கத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். முதலமைச்சர் அறிவித்த 7 அறிவிப்புகள் : குமரி முனையில் திருவள்ளுவர் சிலைக்கு செல்ல 3 புதிய பயணிகள் படகுகள் வாங்கப்படும். முதல் படகிற்கு பெருந்தலைவர் காமராஜர் […]