இழப்பீட்டு தொகையை 20 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவேண்டும் என்றும் தொல் திருமாவளவன் அறிக்கையை வெளியிட்டுள்ளார். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி உள்ள குருங்குடி கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பெண்கள் கருகி உயிரிழந்துள்ள நிலையில், 10 பேர் காயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட அறிக்கையில், இந்த வெடி விபத்து செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை […]
10 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டதை எதிர்த்தும் , அந்த மசோதாவை திரும்ப பெற கோரி சென்னை சேப்பாக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை அமல்படுத்தியதன் மூலம், பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடிக்காது. இந்த 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை திரும்பப் பெறும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
கும்பகோணம் அருகே சோழபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். பள்ளிக்கூடங்களில் மாணவ- மாணவிகளுக்கு சத்துணவில் வழங்கப்பட வேண்டிய முட்டைகள் வெளிச்சந்தையில் விற்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பெரும் ஊழல் நடைபெறுகிறது. இந்த முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் மணல் கடத்தல் அதிகளவில் நடைபெறுகிறது. மணல் கடத்தலில் அமைச்சர்கள் வரை பங்குண்டு. இது குறித்தும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருச்சியில் விடுதலை […]