திருவெறும்பூர் பகுதியில் பெரும்பாலானோர் தினக்கூலி என்பதால் மக்களிடம் பணம் இல்லாததால் மது வாங்க வரவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருந்ததால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது. 40 நாள்களுக்கு பிறகு டெல்லி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் டாஸ்மார்க் கடைகள் திறக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தமிழகத்தில் 3500-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் 43 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டன. மேலும், மது பிரியர்கள் தனிமனித […]
திருச்சியில் ஆற்று மணலை அள்ளுவது அதிகமாகி வந்துள்ளது. இது தொடர்பாக புகார்களும் அதிகமாக வந்துள்ளது. இந்த சம்பவத்தின் போது திருவெரும்பூர் வட்டாசியர் அண்ணாதுரை மணல் அள்ளுவர்களிடம் லஞ்சம் வாங்குவது தொடர்பாக வட்டாசியர் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடந்த விவகாரத்தில் அதன் உயர் அதிகாரிகள் திருவெரும்பூர் வட்டாசியர் அண்ணாதுரை அவர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்ளனர். இதனால் புது வட்டாசியர் ரபீக் அஹமது நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட குண்டூர் ஊராட்சியில் தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்க திட்டம் போடப்பட்டது. அந்த திட்டம் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. தற்போது, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட குண்டூர் ஊராட்சியில் புதிதாக தரைமட்ட நீர்தேக்க தொட்டி அமைக்கும் பணியினை நேரில் அந்த பகுதி சட்டமன்ற உறுப்பினர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பார்வையிட்டார். இது சுமார் 1,00,000 கன அடி கொள்ளவு கொண்ட நீர்தேக்க தொட்டி ஆகும். இந்த தொட்டி அமைக்கும் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்படும் என […]