திருவண்ணாமலை : தமிழகத்தின் தென் கைலாயம் எனப் போற்றப்படும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. இதற்காக கடந்த டிசம்பர் நான்காம் தேதி துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கொடி ஏற்றப்பட்டு தீபத் திருவிழா துவங்கியது. அதனைத் தொடர்ந்து, தினமும் அண்ணாமலையார் கோயிலில் பல்வேறு பூஜைகள் நடைபெற்று வந்தன. நேற்று (டிசம்பர் 12) மகாதீபம் ஏற்ற, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் 2668 அடி உயரம் கொண்ட தீப மலை மீது […]
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 13) திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் உற்சவ நிகழ்வான தீப மலையில் தீபம் ஏற்றும் நிகழ்வானது இன்று மாலை நடைபெற உள்ளது. அதற்கான கொப்பரை தீப மலை உச்சிக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. தீப மலையில் தீபம் ஏற்றும் நிகழ்வை காண மலைமீது எற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றாலும், மலை அடிவாரத்தில் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்துள்ளனர். சுமார் ஒரு லட்சம் வரையில் பக்தர்கல் திருவண்ணாமலைக்கு தற்போது வரையில் வந்துள்ளதாக கூறப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக […]
திருவண்ணாமலை கார்த்திகை தீபம் நாளை நடைபெறுவதையொட்டி மலை உச்சிக்கு கொப்பரை எடுத்துச் செல்லப்படுகிறது. திருவண்ணாமலை ; புகழ்பெற்ற திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வு கடந்த டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற்றது. இதன் உற்சவ நிகழ்வான தீபத்திருவிழா நாளை (டிசம்பர் 13) நடைபெற உள்ளது. நாளை அதிகாலை 4 மணிக்கு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டு, பின்பு மாலை 6:00 மணி அளவில் தீப மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. 2668 […]
சென்னை : அண்மையில் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடந்த டிசம்பர் 1ஆம் தேதியன்று திருவண்ணாமலையின் தீப மலை அடிவாரத்தில் பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 5 குழந்தைகள் உட்பட 7பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து திருவண்ணாமலை தீப திருவிழா இந்த வருடம் வழக்கம் போல நடைபெறுமா என்ற கேள்வி எழுந்தது. இதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்று வரும் சூழலில், கடந்த டிசம்பர் 3ஆம் தேதி வழக்கம் போல திருக்கார்த்திகை தீப […]
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்று [டிசம்பர் 4] கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது. திருவண்ணாமலை :திருக்கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் 13ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் நேற்று திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம் கோலாகலமாக துவங்கியுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் தீப மலையில் மண் சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை தீபமாலையானது 2268 அடி உயரம் கொண்டது .கார்த்திகை தீபத் திருவிழாவின் போது மலை உச்சியில் கொப்பரை கொண்டு சென்று அதில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். […]
சென்னை :திருவண்ணாமலையின் சிறப்புகளும் திருக்கார்த்திகையின் சிறப்புகளையும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். திருவண்ணாமலை அண்ணாமலையார் ஆலய சிறப்புகள் ; திருவண்ணாமலை பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக கூறப்படுகிறது. திருவாரூரில் பிறந்தால் முக்தி ,காசியில் இறந்தால் முக்தி ,காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, தில்லையை தரிசித்தால் முத்தி என்பார்கள் ஆனால் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி என்று கூறுகின்றார்கள். ஈசன் ஜோதியாக நின்ற ஸ்தலம் இதுவே. பிரம்மா மற்றும் திருமாலின் ஆணவம் அழிந்த இடமாகும் , ஈசன் அர்த்தநாரீஸ்வரராக காட்சி கொடுத்த […]
திருவண்ணாமலை –தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி வழிபடுவது திருக்கார்த்திகை தினமாக கொண்டாடப்படுகிறது . இந்த கார்த்திகை தீபம் மூன்று நாட்கள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.இந்த வருடம் கார்த்திகை மாதம் 28ஆம் தேதி டிசம்பர் 13 2024 அன்று வெள்ளிக்கிழமை திருக்கார்த்திகை கொண்டாட படுகிறது .அதிலும் குறிப்பாக திருவண்ணாமலையில் அண்ணாமலையார் கோவிலில் வெகு விமர்சையாக திருக்கார்த்திகை திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் […]