தமிழ் ராக்கர்ஸ் : தமிழ் சினிமா குறிப்பாக திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய தலைவலியாக இந்த தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளம் இருந்து வந்தது. ஒரு திரைப்படத்திற்காக பல கோடி ரூபாய் மதிப்பில் செலவு செய்து படம் எடுத்து திரையிட்டால் இத்திரைப்படத்தை அடுத்த ஒரு சில மணி நேரங்களில் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட பல்வேறு இணையதளங்களில் வெளியாகிவிடுகிறது. இதனால், தற்போது உள்ள காலத்தில் பல்வேறு தொழில் நுட்பங்கள் மூலம் எளிதாக மொபைல் போனிலே ரிலீஸ் ஆகும் திரைப்படங்களை பார்த்து விடுகின்றனர். […]
கேரள லாட்டரி மூலம் புதுச்சேரியை சேர்ந்த பக்தருக்கு ரூ.20 கோடி ஜாக்பாட் அடித்துள்ளது. கேரள அரசின் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் லாட்டரி குலுக்கலில், எக்ஸ் சி 224091 என்ற லாட்டரிக்கு ரூ.20 கோடி பரிசு விழுந்தது. சபரிமலை யாத்திரையின் ஒரு பகுதியாக திருவனந்தபுரத்தில் இருந்த வந்த புதுச்சேரியைச் சேர்ந்த 33 வயதான தொழிலதிபர், கேரளாவின் இரண்டாவது மிக உயர்ந்த லாட்டரி பரிசான ரூ.20 கோடி கிறிஸ்துமஸ்-புத்தாண்டு பம்பரை பரிசை வென்றுள்ளார். பத்மநாப ஸ்வாமி கோவிலின் கிழக்கு […]
எத்தனை விழிப்புணர்வுகள், எத்தனை கடுமையான சட்டங்கள் , எத்தனை குற்றவழக்குகள், எத்தனை தற்கொலைகள் நிகழ்ந்தாலும், வரதட்சணை கொடுமை என்பது அவ்வப்போது அரங்கேறி வருகிறது. இதனால் மனமுடைந்து மணப்பெண் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. இதில் கொடுமை என்னவென்றால் இந்த சம்பவத்தில் நன்கு படித்து சமூகத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களும் ஈடுபடுவது தான் . கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வந்துள்ளார் […]
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் மருதமோன்பள்ளி சாலையில் ஒயூர் பகுதியில் சாரா ரெஜி எனும் 6 வயது சிறுமி நேற்று மாலை சில மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். மாலை வழக்கம் போல தான் செல்லும் டியூசனுக்கு அந்த சிறுமி, தனது 8 வயது சக மாணவனுடன் சென்றுள்ளார். அப்போது வெள்ளை நிற மாருதி டிசையர் காரில் வந்த ஒரு கும்பல் சிறுமியை மாலை 4.45 மணி அளவில் கடத்தியுள்ளது. அதனை 8 வயது சிறுவன் தடுக்க முற்பட்டுள்ளான். […]
தேசிய கல்விக் கொள்கை, காவி கொள்கையாக உள்ளது என திருவனந்தபுரம் சிபிஐ மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் உரை. திருவனந்தபுரம் CPI 24-ஆவது மாநில மாநாட்டில் மத்திய-மாநில உறவுகள் குறித்து சிறப்புரையாற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின், நேரடியாக செய்ய முடியாத அரசியல் தலையீடுகளை சட்டத்தை கொண்டு செய்ய பார்க்கிறது மத்திய அரசு. மாநிலங்கள் பிரச்சனை தொடர்பாக கடிதம் எழுதியும் பதில் வருவதில்லை. மாநிலங்களின் எண்ணங்களை நாடாளுமன்றத்தில் எழுப்பினால் அதற்கு உரிய பதில் அளிப்பதில்லை. திமுக, கம்யூனிஸ்ட் ஆட்சியில் […]
திருவனந்தபுரத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் விண்ட்ஷீல்ட் வெடித்ததால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. சவுதி அரேபியாவுக்கு சென்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், திடீரென அதன் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதை தொடர்ந்து திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இன்று காலை 7.52 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து சவுதி அரேபியாவுக்கு புறப்பட்ட விமானம், கண்ணாடியில் விரிசல் இருப்பதை விமானிகள் கவனித்த பின்னர், ஒரு மணி நேரத்திற்குள் விமான நிலையத்திற்கு திரும்பியது. காலை 8.50 […]
கேரளாவில் புதிதாக 5 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று பரவியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளதாவது, கேரளாவில் மேலும் 5 பேருக்கு புதிதாக ஜிகா வைரஸ் தொற்று பரவியுள்ளதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 28 ஆக அதிகரித்துள்ளது. புதிதாக பாதிக்கப்பட்ட ஐந்து பேரில், இரண்டு பேர் அனயரா பகுதியை சேர்ந்தவர்கள். குன்னுகுஷி, பட்டோம் மற்றும் கிழக்கு கோட்டை பகுதிகளில் தலா ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. […]
கேரள மாநிலம், திருவனந்தபுரம், காசர்கோடு அடுத்து சென்னிக்கரையை சேர்ந்தவர் சத்தியேந்திரன். இவருக்கு மனைவியும் 6 மாதத்தில் அன்வேத் என்ற ஆண் குழந்தையும் இருந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் 10-ஆம் தேதி குழந்தை அன்வேத் வீட்டில் தவழ்ந்து தவழ்ந்து விளையாடி வந்துள்ளது. திடீரென அப்போது மயக்கம் அடைந்து குழந்தை கீழே விழுந்தது. இதனை பார்த்த பெற்றோர் உடனடியாக குழந்தையை காசர்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக […]
கேரளா: 21 வயதான பிஎஸ்சி மாணவி ஆர்யா ராஜேந்திரன் திருவனந்தபுரத்தின் அடுத்த மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் பதவியேற்றதும், அவர் மாநிலத்தின் முதல் இளம் மேயர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். சிபிஎம் வேட்பாளரான ஆர்யா, முடவன்முகல் வார்டில் இருந்து யுடிஎஃப் வேட்பாளர் ஸ்ரீகலாவை 2872 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து அவர் மாவட்டத்தின் இளைய வேட்பாளராக தேர்ந்தெடுக்கபட்டுள்ளார். ஆல் புனிதர்கள் கல்லூரி திருவனந்தபுரத்தில் இரண்டாம் ஆண்டு பிஎஸ்சி கணித மாணவர், ஆர்யா பாலா சங்கத்தின்மாநிலத் தலைவராகவும், சிபிஎம் மாணவர் பிரிவான […]
இன்று நடைபெற்ற கேரளா சட்டப்பேரவையில் திருவனந்தபுரம் விமான நிலையம் தனியார் மயமாக்கலை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தனியார் பங்களிப்புடன் 3 விமான நிலையங்கள் இயங்க மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார். அதில், அசாம் கவுகாத்தி, ராஜஸ்தான் ஜெய்ப்பூர், கேரளா திருவனந்தபுரம் ஆகிய விமான நிலையங்கள் தனியார் பங்களிப்புடன் இயங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். இதனையடுத்து, […]
நேற்று கேரளாவில் 593 பேருக்கு கரோனா உருதியானது என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தார். இந்நிலையில் திருவனந்தபுரம் கடற்கரை கிராமங்களில் 10 நாள் முழு ஊரடங்கு. திருவனந்தபுரம் கடற்கரை பகுதியில் இன்று இரவு 12 மணி முதல் ஜூலை 28 நள்ளிரவு வரை முழு ஊரடங்கு என கேரளா முதல்வர் தெரிவித்தார். கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 593 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 11,659ஆக உயர்ந்துள்ளது. […]
மேற்கு இந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.முதலில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது.இன்று இரண்டாவது டி-20 போட்டி நடைபெறுகிறது.கேரளாவில் மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள கிரீன் பீல்டு மைதானத்தில் ( Greenfield Stadium) நடைபெறுகிறது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் அணியின் கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இந்திய அணி வீரர்கள் விவரம் : ரோகித் சர்மா, […]
திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் மூன்று வயதான வெள்ளை நிறம் கொண்ட பொமேரியன் நாய் ஒன்று சாலையில் இங்கும் அங்கும் சுற்றி ஓடிக்கொண்டிருந்தது.இதை பார்த்த விலங்குகள் நல ஆர்வலர் ஷமீன் அந்த பொமேரியன் நாயை மீட்டார். அப்போது அவருக்கு அதிர்ச்சியான செய்தி ஓன்று காத்து இருந்தது.அந்த நாயின் கழுத்தில் ஒரு தூண்டு தாளில் ஒரு சில வார்த்தைகள் மலையாளத்தில் எழுதப்பட்டு இருந்தது.அந்த தாளில் “இந்த நாய் நன்றாக பழகும் , அதிக உணவு சாப்பிடும் அதிகமாக பால், […]
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில் புகழ் பெற்ற பத்மநாபசுவாமி கோவில் உள்ளது. பத்மநாபசுவாமி கோவிலில் உள்ள சிலைகளை ஆண்டுக்கு இருமுறை (அக்டோபர்-நவம்பர், மார்ச்-ஏப்ரல்) அங்குள்ள சங்குமுகம் கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று புனித நீராட்டுவார்கள். பின்னர் சாமி சிலைகள் மீண்டும் கோவிலுக்கு திரும்பும். இந்த கடற்கரை திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு பின்புறம் உள்ளது. இதனால் விமான நிலையத்தின் ஓடுபாதை வழியாக சாமி சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த ஆண்டின் புனித நீராட்டு விழாவையொட்டி […]
மதிமுக தலைவர் வைகோ அவர்கள் இன்று (21.03.2018) மாலை கேரள முன்னாள் முதல்வரும்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெரும் தலைவருமான திரு.அச்சுதானந்தன் அவர்களை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து *நியூட்ரினோ* சம்பந்தமான கடிதத்தைக் கொடுத்தார்.