திருவள்ளூர் மாவட்டம் எளாவூரில், தமிழ்நாடு-ஆந்திரா எல்லையில், நாட்டிலேயே, முதன்முறையாக, 6 துறைகளை ஒருங்கிணைத்து, 137 கோடியே 18 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள, நவீன சோதனைச் சாவடியை, விரைவில் முதலமைச்சர் திறந்து வைப்பார் என போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்திருக்கிறார்.. சோதனைச் சாவடியில், போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டபோது, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெஞ்சமின், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி உள்ளிட்டோர் உடனிருந்தன.