தேசிய கொடி ஏற்ற விடாமல் தடுத்த விவகாரம்.. ஊராட்சிமன்ற செயலாளர் சஸ்பெண்ட்- மாவட்ட ஆட்சியர் அதிரடி!!

ஊராட்சி தலைவரை கொடியேற்ற அனுமதிக்காத வழக்கில், பட்டியலின ஊராட்சிமன்ற செயலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளுர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் அருகே பட்டியலின ஊராட்சி தலைவரை கொடியேற்ற அனுமதிக்காத வழக்கில், ஊராட்சிமன்ற செயலாளர் சசிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ஊராட்சிமன்ற துணை தலைவரின் கணவர் உட்பட 3 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், ஆத்துப்பக்கம் ஊராட்சி தலைவரை அழைத்து நேரில் விசாரிக்கவுள்ளதாகவும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், அந்த சம்பவம் குறித்த … Read more

எலும்புக்கூடாக மாணவி…தனிப்படை போலீசார் தீவிர விசாரணை…!!

திருவள்ளுவர் மாவட்டத்தில் நான்கு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன பத்தாம் வகுப்பு மாணவி எலும்புக்கூடாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருத்தணி அருகே வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த சரிதா என்ற மாணவி கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிக்கு சென்றபோது காணாமல் போனதாக மாணவியின் தந்தை சுப்பிரமணி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் மாயமான மாணவியை போலீசார் தேடி வந்த நிலையில் கிராமத்தில் கரும்பு தோட்டம் ஒன்று பள்ளி சீருடையுடன் எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது.இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் … Read more

நகைக் கடை பூட்டை உடைத்து திருட்டு…!!

திருவள்ளூர் மாவட்ட கொண்டமாபுரம் தெரு சாந்தி ஜுவல்லர்ஸ் கடையின் முன்பக்கமாக உள்ள இரும்பு கதவின் பூட்டுக்கள் வெல்டிங் மெசின் கொண்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து போலீஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.பின்னர்  கடை உள்ளே சென்ற போது  35 சவரன் தங்க நகைகள், ஐந்து லட்சம் ரூபாய் பணம், ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான 80 வைரக்கற்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்ததையடுத்து திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

கும்மிடிபூண்டி அருகே விபத்துக்குள்ளான சமையல் எரிவாயு டேங்கர் லாரி: 2-வது நாளாக எரிவாயு நிரப்பும் பணி தீவிரம்…!!

கும்மிடிபூண்டி அருகே விபத்துக்குள்ளான சமையல் எரிவாயு டேங்கர் லாரியில் இருந்து, இரண்டாவது நாளாக குழாய் மூலம் எரிவாயுவை மாற்றும் பணி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் சென்னை-கொல்கொத்தா தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சமையல் எரிவாயு ஏற்றி சென்ற டேங்கர் லாரி நேற்று விபத்துக்குள்ளானது. இதனால் டேங்கர் லாரியில் இருந்து எரிவாயு கசிந்து வெளியேறியதால், போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, பொது மக்கள் அருகில் செல்லாதவாறு தீயணைப்பு துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் … Read more

நீர்நிலை ஆக்கிரமிப்பு…கடும் நடவடிக்கை…திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி…!!

நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீதும், துணை போகும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என திருவள்ளூர் ஆட்சியர் மகேஸ்வரி தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள வருவாய் கோட்டங்களில் சிறப்பு குறை தீர்க்கும் முகாமை ஆட்சியர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். அப்போது, 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்களது குறைகளை ஆட்சியரிடம் மனுவாக அளித்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் மகேஸ்வரி, அரசு நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு … Read more

இயற்கை வேளாண்மை செய்ய ஆர்வமா..?? வாருங்கள் திருவள்ளூர் நோக்கி……

இயற்கை வேளாண்மை செய்ய விரும்புவோர் பார்க்க வேண்டிய பண்ணை! இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாரின் கனவுகள், தற்போதுதான் மெல்ல மெல்ல நனவாகி வருகின்றன. அதற்கு நல்ல முன்னுதாரணமாக இருப்பது திருவள்ளூர் அருகே, அரக்கோணம் சாலையில் உள்ள லியோ இயற்கை சுயசார்பு பண்ணை. இப்பண்ணையானது சுமார் 200 ஏக்கர் சுற்றளவில் அமைந்துள்ளது. காற்று, சூரியசக்தி தவிர வெளியிலிருந்து எதுவும் எடுத்துச் செல்லப்படுவதில்லை. இப்பண்ணையில் 17 வகை மாமரங்கள், நெல்லி, சப்போட்டா, மாதுளை, வாழை என பல வகை பழ மரங்கள் … Read more