திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அவிநாசிபாளையம் பகுதியில் உள்ள சேமலைக்கவுண்டம்பாளையம் கிராமத்தில் தெய்வசிகாமணி, அலமாத்தாள் எனும் வயதான தம்பதி தங்களுக்கு சொந்தமான தோப்பு வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். இவர்களது மகன் செந்தில்குமார் கோவையில் ஓர் தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு கவிதா எனும் மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று செந்தில் குமார் கோவையில் இருந்து கிராமத்தில் ஒரு குடும்ப விசேஷத்திற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். இப்படியான சூழலில் […]
பச்சிளம் குழந்தையை துணிகளோடு கட்டைப்பையில் வைத்து எடுத்து சென்றதால் குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்தவர் சண்முகம். இவர் 2016 ஆம் ஆண்டு காதலித்து தனலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 2 பெண் மற்றும் 1 ஆண் குழந்தை இருக்கிறது. தற்போது மீண்டும் தனலட்சுமிக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் கடந்த 12 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் பிறந்த குழந்தைக்கு ரத்தம் குறைவாக இருந்ததால் திருப்பூர் […]
வழிபோக்கு ஜோதிடத்தை நம்பி, கிளி ஜோசியரை கொலை செய்ததாக அக்கவுண்டன்ட் ரகு வாக்கு மூலம் அளித்துள்ளார். திருப்பூர், குமரன் சாலையில் உள்ள புங்கா அருகே டிசம்பர் 24ம் தேதி கிளி ஜோதிடர் ரமேஷ் ஹெல்மெட் அணிந்த நபரால் கொடுராமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாக பரவியது. திருப்பூர் வடக்கு போலீசார் தனிப்படை அமைத்து, கொலையாளியை தேடி வந்த நிலையில், டிசம்பர் 26ம் தேதி சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் […]
திருப்பூர் மாவட்டம், பொங்கலூர் ஒன்றியம், அலகுமலை ஊராட்சியில் தலித் மக்களின் வழித்தடப் பாதையை மறித்து ஆளும்கட்சி பிரமுகர் கம்பி வேலி அமைத்து தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் திருப்பூர் மாவட்ட ஊராட்சி தலைவர் சண்முகம் மற்றும் சிதம்பரம் ஆகியோர் கடந்த 15ஆம் தேதி அலகுமலை கிராமத்தில் தலித் மக்கள் பயன்படுத்தி வந்த பாதையை மறித்து திடீரென கம்பி வேலி அமைத்தனர். இப்பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி காவல்துறை, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் […]
திருப்பூர் மாவட்டம் அமராவதி ஆற்றில் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையால் அமராவதி அணை வேகமாக நிரம்பிவரும் நிலையில் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை அறிவுறுத்தப்பட்டுள்ளது வெள்ளம் தொடர்பாக உதவிக்கு 1077 என்ற தொலைபேசியில் தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குழியில் உள்ள மொரட்டுபாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வரும் நாகராஜ், மணிகண்டன் ஆகியோரை நான்கு இளைஞர்கள் வந்து தாக்கினர். வெளியாட்கள் வந்து பள்ளிமானவர்களை தாக்கும் காட்சிகள் சமூகவளைதலங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை அறிந்து போலீசார் வந்து அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பள்ளியில் வைத்து மாணவர்களை தாக்குவது அந்த பகுதி மக்களிடம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.