தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இன்று அதிகாலை முதலே பல மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில், பூம்புகார் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்து வருவதன் காரணமாக ஒரு சில இடங்களில் மழை பாதிப்புகளில் இருந்து பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர் இந்த நிலையில், திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பழமையான சமுதாயக் கூட மேற்கூரை இடிந்து […]
திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் 20 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த வார்டில் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டால், செயற்கை சுவாசம் அளிப்பதற்காக ஆக்சிஜன் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதற்கிடையே தற்போது திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுவதற்கான பணிகள் தீவிரமாக நடக்கிறது. இதற்காக திருப்பூர் அரசு மருத்துவமனையில் பல்வேறு பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டுள்ளன. இதுபோல் நேற்று கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டு அருகே கட்டிட பணிக்காக பொக்லைன் எந்திரம் மூலம் தோண்டும் […]
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள C.S.I.C.C.C மாணவியர் விடுதியில் கணினி அறையில் நபியா என்ற மாணவி மாணவி தூக்கிட்டு கொண்டதாகவும் , அவர் மருத்துவமனை சென்று வழியில் அவர் இறந்து விட்டதாகவும் பள்ளி நிர்வாகம் கூறுகின்றது. ஆனால் இதை நம்ப மறுத்த நபியா பெற்றோர்களும் உறவினர்களும் தாராபுரம் மருத்துவமனைக்கு சென்றனர். மருத்துவமனை சென்ற போது அங்கே பெற்றோர்களின் ஒப்புதல் இன்றி நபியா உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.எனவே நபியா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி அவரது பெற்றோரும் உறவினர்களும் […]
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள தனியார் பள்ளியைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் திருவருட்செல்வன். இம்மாணவன் செயற்கை மழையை பெய்விக்க உதவும் ஆளில்லா விமானத்தை கண்டுபிடித்து சாதணை படைத்து உள்ளார். 400 அடி உயரம் வரை பறக்கும் வகையில் இந்த ஆளில்லா விமானத்தை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் சிறிய பரப்பளவில் போதுமான மழையை பெய்விக்க முடியும். திருவருட்செல்வனின் இந்த திட்டம், பல மாவட்ட அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசை பெற்றுள்ளது. முத்தாய்ப்பாக மாணவனின் இத்திட்டத்தை அங்கீகரிக்கும் வகையில் வரும் […]
வைகுண்ட ஏகாதேசி விழாவை முன்னிட்டு திருப்பூரில் ஒரு லட்சத்து எட்டு ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.வரும் செவ்வாய்கிழமை வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற உள்ளது. இந்நாளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறும். இந்த விழாவையொட்டி திருப்பூர் காமாட்சி அம்மன் திருமண மண்டபத்தில் ஸ்ரீவாரி அமைப்பு சார்பில் ஒரு லட்சத்து எட்டாயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த லட்டுகள் அனைத்தும் திருப்பூரில் பிரசித்தி பெற்ற வீரராகவ பெருமாள் கோவிலில் […]
திருப்பூர், திருப்பூரில் எலக்ட்ரீஷியனை அடித்து கொலை செய்தது தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட நான்கு பேரை காவல் துறையினர் கொலை வழக்கில் கைது செய்தனர். திருப்பூர் மாவாட்டம் பொல்லிக்காளிபாளையம் பெருந்தொழுவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 27) இவரது மனைவி ஜெயந்தி. இவர் எலக்ட்ரீஷியன் வேலை பார்த்து வருகிறார். இவர்களது வீட்டின் அருகே வசித்து வருபவர் ராதா(50). இந்நிலையில் ராதாவின் வீடு புதுப்பிக்கும் பணி நடைபெற்றதை ஒட்டி, அவரது வீட்டில் இருந்த சாமான்களை ஜெயந்தி வீட்டில் வைத்துள்ளார். இந்நிலையில் […]
திருப்பூர்:மாவட்ட அரசு மருத்துவமனைகளில், நாய்க்கடி சிகிச்சைக்கு, போதியளவு தடுப்பூசி மருந்து இல்லாதது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர் மாநகரம், அவிநாசி, பல்லடம், பொங்கலுார் உட்பட சுற்றுப்புற பகுதிகளில், சமீப நாட்களாக தெருநாய் தொல்லை அதிகரித்து வருகிறது. இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், ஆங்காங்கே கூட்டம், கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள், பொதுமக்களை விரட்டுகின்றன. குறிப்பாக, நாய்களை பார்த்து பயந்து ஒதுங்கி ஓடும் பள்ளிக் குழந்தைகளை துரத்திச் சென்றுகடிக்கின்றன. நாய்க்கடிக்கு, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவது தான் உகந்தது என்ற […]
இன்று கொடி காத்த குமரன் எனப்படும் திருப்பூர் குமரன் நினைவு நாள் -ஜனவரி 11 – சுதந்திரப் போராட்டத்தின் போது ஆங்கிலேயர்கள் நடத்திய தடியடியில் திருப்பூர் குமரன் படுகாயம் அடைந்து 1932ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிறந்த குமரன் நாட்டின் விடுதலைக்காக நடந்த சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்றார். 1932ஆம் ஆண்டு நாடு முழுவதும் சட்ட மறுப்புப் போராட்டம் நடைபெற்றது. ஜனவரி 11ஆம் தேதி திருப்பூரில் மறியல் போராட்டத்தில் பங்கேற்பதற்காக கையில் […]
திருப்பூர் அருகே பேருந்து மோதி பள்ளி மாணவி உயிரிழந்தார்.இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து .இதனால் இருசக்கர வாகனத்தில் வந்த மாணவி உயிரிழப்பு.இந்த விபத்தில் 12ம் வகுப்பு மாணவி உயிரிழந்தார். சாலை விபத்தில் உயிரிழந்த மாணவி தாரணியின் உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது… source: dinasuvadu.com
திருப்பூர்- பல்லடம் சாலையில், நொச்சிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையின் அருகிலேயே மதுபான பாரும் செயல்பட்டு வருகிறது . இந்த பாரை அகற்றக் கோரி, பொதுமக்களுடன் இணைந்து கல்லூரி மாணவர்கள் பலமுறை போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . இந்நிலையில், கல்லூரி மாணவர் ரமேஷ்-க்கு, பார் ஊழியர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ரமேஷின் நண்பர்கள், பாரில் இருந்த நாற்காலிகள், காலி பாட்டில்கள் மற்றும் பொருட்களை உடைத்து சேதப்படுத்தினர். இரு தரப்பினரும் அளித்த […]
திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 54,637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் அமராவதி அணையில் இருந்து பழைய, புதிய ஆயக்கட்டு பாசத்திற்கு கூடுதல் நீர் திறக்கப்பட உள்ளது.இன்று முதல் வரும் 31ம் தேதி வரையில் இடைவெளி விட்டு அணையைத் திறக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது அரசு பேருந்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர்.மேலும் காயமடைந்த பலர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
திருப்பூர்; மாவட்டம் பல்லடம் அருகே சாலையில் வந்து கொண்டிருந்த கன்டெய்னர் லாரி மீது ஆம்னி வேன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டதில் 4 பேர் உயிரிழந்தனர். திருப்பூர் காங்கயம் ரோடு வி.எஸ்.ஏ. நகர் பகுதியை சேர்ந்த கார்த்தி , மாணிக்கராஜ். இவர்கள் சகோதரர்கள். இருவரும் பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தனர். கார்த்தி புதிதாக ஆம்னி வேன் வாங்கி இருந்தார். இதற்கு உதிரி பாகங்கள் வாங்க ஆம்னி வேனில் கோவை வந்தனர். அதன்பிறகு சகோதரர் மாணிக்கராஜ் மற்றும் அவரது […]