சென்னை: பீலா வெங்கடேசன் அளித்த புகாரில் இன்று காலை கைதான முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து திருப்போரூர் நீதிமன்றம் அவருக்கு நீதிமன்ற பிணை அளித்துள்ளது. முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது அவரது முன்னாள் மனைவி பீலா வெங்கடேசன் கடந்த 20ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். அதில், ராஜேஷ் தாஸ் கடந்த 18ஆம் தேதி அடியாட்களுடன் தையூரில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு வந்து […]