திருப்பூர் மாவட்டத்தில் தங்களது இறுதி சடங்கிற்கு செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பல்லடத்தில் உள்ள சின்னகாளிபாளையம் எனும் கிராமத்தில், தனது மகன் கோபால கிருஷ்ணனுடன் துரைராஜ் வசித்து வந்தார். இவரது மனைவி ஏற்கனவே இறந்துவிட்டார். துரைராஜ் மகள் செல்வியின் மகள் அண்மையில் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனால் குடும்பமே சோகத்தில் மூழ்கியது. திடீரென மகள் செல்வியிடம் 30 ஆயிரம் பணம் கொடுத்துவிட்டு செலவுக்கு தேவைப்படும் என […]
திருப்பூரில் மாற்றுக்கட்சியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். திருப்பூர் மாவட்டம், உடுமலையில் அதிமுக அரசின் 47ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா மற்றும் கல்வெட்டு திறப்பு நடைபெற்றது. அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், கொடியேற்றி, கல்வெட்டை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திமுக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், தீபா பேரவையில் உள்ளிட்ட கட்சிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டவர்கள், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தங்களை இணைத்துக் […]
சாலை விபத்தில் காலை இழந்த சிறுமிக்கு ரூ. 19 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்ட கீழ் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்துக்கு வந்த இன்ஷுரன்ஸ் நிறுவனத்துக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ரூ. 52 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு திருப்பூரில் சாலையோரம் சென்று கொண்டிருந்த 2-ம் வகுப்பு படிக்கும் எட்டு வயது சிறுமி மீது தனியார் பேருந்து ஏறிச் சென்றதில், அவர் தன் வலது காலை இழந்து விட்டார். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட […]
தாராபுரத்தில் அறுந்து கிடந்த மின்கம்பி உரசியதில் பசுமாடு பலியானது. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு அருகில் உள்ளது வினோபா நகர். இங்கு 200க்கு மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் உயர்அழுத்த மின் கம்பம் ஒன்று கடந்த 15 நாட்களுக்கு முன் பெய்த மழையால் சாய்ந்தது. இது தொடர்பாக மின் வாரிய அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரிய ஊழியர்கள் கம்பத்தை உடனே மாற்ற போதிய ஆள்வசதி இல்லை என கூறி மின் […]
திருப்பூர் பேருந்து நிறுத்தத்தில் இளம்பெண்ணை செல்போனில் படம் பிடித்த வடமாநில இளைஞருக்கு பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத் தில் ஒப்படைத்தனர். திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் வசிக்கும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சிவராஜ். இவர் நல்லூர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் செவ்வாயன்று திருப்பூர் அவிநாசி சாலையிலுள்ள குமார் நகர் பேருந்து நிறுத்தத்தில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற பெண்களை செல்போனில் படம் பிடித்துள்ளார். […]
திருப்பூர், தமிழக சட்டபேரவை உறுதிமொழி ஆய்வுக்குழுவினர் திருப்பூரில் அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை வியாழனன்று ஆய்வு செய்தனர். தமிழக சட்டபேரவை உறுதிமொழி ஆய்வுக்குழுவின் தலைவர் ஐ.எஸ். இன்பத்துரை தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் புதன்கிழமை முதல் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். புதனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. பின் உறுதிமொழி ஆய்வுக்குழுவினர் வியாழனன்று மாவட்டத்தில் அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களான மேம்பாலங்கள், சிக்கண்ணா கல்லூரியில் உள்ள உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். மேலும் […]
திருப்பூர்,திருப்பூரில் பனியன் நிறுவன உரிமையாளர்கள் பேரில் போலி ஆவணம் தயாரித்து ரூ.18 கோடி மோசடி செய்த தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர். திருப்பூர் காவிப் பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி (59). பனியன் ஏற்றுமதி நிறுவனம் மற்றும் ஆடைகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இந்த நிறுவனத்திற்கு டைமண்ட் தியேட்டர் அருகே உள்ள வங்கி கிளையில் கணக்கு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் ராமசாமி வங்கிக்கு சென்ற போது அவரது கணக்கில் ரூ. 3 கோடியே […]
திருப்பூர், நாட்டில் சிலரிடம் மட்டும் அதிகாரம் குவிந்து வரும் நிலை உள்ளது. இது மிகவும் ஆபத்தானது என்று காந்தி கிராம பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் ந.மார்க்கண்டன் கூறினார்.திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் செவ்வாயன்று இலவச காய்கறி கிராம விழிப்புணர்வு தொடக்க விழா கல்லூரி முதல்வர் எஸ்.இராமையா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை விழுதுகள் சமூக நல அமைப்பின் இயக்குநர் தங்கவேல் தொடங்கி வைத்தார். இதில் கிராம மேம்பாட்டு எழுத்தாளர் பாரதி சின்னசாமி எழுதிய “எல்லாமே இலவசம்” என்ற […]
நெகிழி பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விளாமரத்துப்பட்டி மற்றும் பாம்பனுத்து கிராம பொதுமக்கள் பொதுமக்கள் இணைந்து ரேக்ளா பந்தயத்தை நடத்தினர். பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த ரேக்ளா பந்தயத்தில் ஆர்வத்துடன் 300 க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகள் பங்கேற்றன. 200, 300 மீட்டர் என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றிபெற்ற மாட்டு வண்டிகளுக்கு தங்க நாணயம் மற்றும் […]