திருப்பதி அருகில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருப்பதியில் இருந்து 85 கி.மீ. வடகிழக்கில் லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவாகியுள்ளது.
இன்று முதல் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 ஆயிரம் பக்தர்களுக்கு இலவசமாக டோக்கன் வழங்கி அனுமதியளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதலே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு நிலையில் உள்ளது. தற்போதும் நடைமுறையில் இருந்தாலும் மக்களின் வாழ்வாதாரம் கருதி சில தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் மார்ச் மாதம் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போதே கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்துமே மூடப்பட்டது. அதில் ஒன்றாக பிரபலமான திருமலையில் உள்ள திருப்பதி கோவிலிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு முன்பதிவு இன்று தொடங்குகிறது. திருவேங்கடப்பதி எனப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பரவிவந்த கொரோனா காரணமாக பக்தர்களுக்கான தரிசனம் நிறுத்தப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடந்த ஜூன் 11ம் தேதி முதல் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்காக ₹300 டிக்கெட் மூலம் தினமும் 13 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்கப்படுகின்றன. அதில், இம்மாதம் 30ம் தேதி வரைக்கான டிக்கெட்டுகள் ஏற்கனவே முன்பதிவின் மூலம் விற்கப்பட்டு விட்டன. இந்நிலையில், அக்டோபருக்கான 300 சிறப்பு நுழைவு […]
செப்டம்பர் 30 வரையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் பிரசித்திபெற்ற வழிபாட்டு தலங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அண்மையில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. அனுமதி வழங்கிய சில நாட்களில் அங்குள்ள சில ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானது. இதனை தொடர்ந்து மீண்டும் திருப்பதி கோவில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் தரிசனத்திற்காக கோவில் […]
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவிய நிலையில் இந்தியாவில் பரவலை தடுக்க முழூ ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், கடந்த மார்ச் 20ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதனால், கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் உள்ள நிலையில், மே 17ம் தேதிக்கு பின் வழிபாட்டு தலங்களை திறக்க வாய்ப்புள்ளதால், திருப்பதி கோயிலில் சமூக இடைவெளியுடன் பக்தர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர். இதனால், ஆந்திர […]
மலைபாதை வழியாக கோயிலுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு தலா ஒரு லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அனைத்து பக்தர்களுக்கும் இன்று முதல் தலா ஒரு லட்டு இலவசமாக வழங்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி கோயிலில் இலவச தரிசனம், சர்வ தரிசனம் , திவ்ய தரிசனம், செய்யும் பக்தர்களுக்கு சலுகை முறையில் ரூ.70 -க்கு தலா 4 லட்டுகள் வழங்கப்பட்டு […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமியை தரிசனம் செய்ய வழங்கி வந்த விஐபி தரிசனம் முறை ரத்து செய்யப்படுவதாக ஆந்திர உயர் நீதிமன்றம் தேவஸ்தானம் போர்ட்க்கு உத்தரவிட்டுள்ளது. உலக அளவில் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலை பெருமாள் கோவில். இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதில், மிக முக்கிய பிரமுகர்கள் , முக்கிய பிரமுகர்கள் தரிசிக்க வி ஐ பி தரிசனம் என்ற பெயரில் 500 ரூபாய் கட்டணத்தில் L1, L2, L3 என்ற முறையில் […]
உலகப் பிரசித்திபெற்ற தலமான திருப்பதி ஏழுமலையான் கோயில், திருமலா திருப்பதி தேவஸ்தானம் பெயரில் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. திருப்பதியில், நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்தரிசனம் செய்கின்றனர். மேலும் நன்கொடைகள் அதிகமாகக்கிடைப்பதால் , அவை வங்கிகளில் டெபாசிட்செய்யப்படுகின்றன. அந்தவகையில்தற்போது திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆந்திராவில் உள்ள இரண்டு வங்கிகளில் 4 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருமலா திருப்பதி தேவஸ்தானம் அலுவலர் ஏ.கே சிங்கால்செய்தியாளர்களிடம்பேசும்போது’ திருப்பதி தேவஸ்தான பணத்தை தங்களிடம் டெபாசிட் செய்யுமாறு, பல்வேறு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் கோரின. […]