திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் சரவணன் வேட்பு மனு தாக்கல் செய்தார். தமிழகத்தில் 18 தொகுதிகளுடன் சேர்த்து மீதமுள்ள நான்கு தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்த 4 தொகுதிகளில் மே 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டது.அதன்படி திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுயில் திமுக சார்பாக சரவணன் போட்டியிடுகிறார். இந்நிலையில் இன்று திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் சரவணன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
கடந்த முறை நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர் ஏ.கே. போஸ் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஏ.கே.போஸ் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் வழக்கு: கடந்த முறை நடைபெற்ற திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில், அ.தி.மு.க வேட்பாளர் ஏ.கே. போஸ் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இதனை எதிர்த்து திமுக வேட்பாளர் டாக்டர் பி.சரவணன், உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தேர்தல் நடந்த நேரத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா, அ.தி.மு.க […]